சென்னை போலவே பெங்களூரிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் கனமழையை பெய்து வருகிறது, பெங்களூரின் பல பகுதிகளில் பெய்த கனமழை, வெள்ளத்தை ஏற்படுத்த வழிவகுத்ததுள்ளது. பெங்களூர் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது அவுட்டர் ரிங் ரோடு (ORR) இல் 300 ஏக்கரில் அமைந்துள்ள மிகப்பெரிய அலுவலக வளாகமான மான்யதா டெக் பார்க் தான்.
மான்யதா டெக் பார்க்-ல் அனைத்து சாலைகளையும் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது என சமூக ஊடகத்தில் அடுத்தடுத்து பதிவுகள் வெளியாகியுள்ளது, இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பாக முன்கூட்டியே வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மான்யதா டெக் பார்க் வீடியோக்களில், சாலைகள் மற்றும் திறந்த வெளிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் சில அலுவலகங்களின் பேஸ்மென்டிலும் தண்ணீர் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பகுதியில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.
மான்யதா டெக் பார்க் பாதிப்புகளும் மழை வெள்ளம் ஏற்கனவே மோசமாக இருக்கும் பெங்களூர் போக்குவரத்து நெரிசலுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்யதா டெக் பார்க் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் மோசமான டிராபிக் இன்று மதியம் 3 மணி முதல் உருவாகியுள்ளது.
இதேபோல் பெங்களூரின் மற்றொரு முக்கியமான சாலையாக விளங்கும் ஹெப்பால் ப்ளைஓவர் மழை வெள்ளத்தால் ஏற்கனவே மோசமான போக்குவரத்து நெரிசலை எதிர்கொண்டு வருகிறது, மேலும் மக்கள் மாலை உச்ச நேரங்களில் அலுவலகத்தை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது நிலைமை மோசமடைந்துள்ளது.
பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அக்டோபர் 17 வரை மிதமான முதல் கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நீண்ட கால மழை பெங்களூரு நகரின் வடிகால் மற்றும் வெள்ள மேலாண்மை ஆகியவற்றின் உள்கட்டமைப்பை மீண்டும் பதபார்க்க உள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோல பெங்களூரில் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது மட்டும் அல்லாமல் பல ஆடம்பர குடியிருப்புகள் பெருமளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இப்படியிருக்கும் வேளையில் அடுத்த 3 நாள் மழை இதேபோன்ற பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications