செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பெங்களூருவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், நகரத்தின் நாள்பட்ட வெள்ளப்பெருக்கு பிரச்சினைகள் குறித்து விவாதம் எழுந்துள்ளது. பிரபலமான பீனிக்ஸ் மாலின் நுழைவாயிலும், கார் நிறுத்தும் இடமும் வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடங்கங்களில் பரவத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
"மால் ஆஃப் ஏசியா ரெயின்ஃபால் ஆஃப் ஏசியாவாக மாறி உள்ளது" என்று ஒரு சோசியல் மீடியா பயனர் கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு பயனர் "ஷாப்பிங்கும், ஸ்விம்மிங்கும் ஒரே இடத்தில் சந்தித்த பொழுது" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

மன்யாட்டா டெக் பார்க், தொழில்நுட்ப பூங்காவிற்குள் உள்ள கட்டுமான தளத்தில் ஒரு அணைக்கட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து பலரும் "மன்யாட்டா டெக் நீர்வீழ்ச்சி" என்று அப்பகுதியை கிண்டலாக அழைத்தனர்.
இடியுடன் கூடிய மலையைத் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இந்த சுவர் சரிந்து விழுந்தது. தீவிர வானிலை நிகழ்வுகள் நகரத்தின் உள்கட்டமைப்பை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த விஷயம் பெங்களூரு உள்கட்டமைப்பு மற்றும் வடிகால் வசதிகளில் இருக்கும் கடுமையான சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது என்று கர்நாடகா அப்டேட்ஸ் ட்வீட் செய்திருந்தது.
செவ்வாயன்று, எபிசு டெக் பார்க் அருகே, அதே மன்யாட்டா வளாகத்திற்குள் மற்றும் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. 330 ஏக்கர் பரப்பளவிலான மன்யாட்டா டெக் பார்க், 500 நிறுவனங்களின் தளமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை பெங்களூரில் பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்த வளாகம் வெள்ளத்தில் மூழ்கியது.
டெக் பார்க்கில் உள்ள பல நிறுவனங்கள், சாலைகள் தெளிவாகும் வரை ஊழியர்களை அலுவலகத்தில் தங்கி இருக்குமாறு அறிவுறுத்தின. ஊழியர்கள் வெள்ளம் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க WFH வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூர் பல ஆண்டுகளாக மோசமான டிரைனேஜ் வசதி காரணமாக போராடி வருகிறது. இதனால் ஒவ்வொரு முறை மழைக்காலம் வரும்போதும் மக்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கிறது. பீனிக்ஸ் மால் போன்ற முக்கிய வணிக மையங்களுக்குள் மக்களால் மழைக்காலங்களில் செல்ல முடிவதில்லை. தினசரி வாழ்க்கையை பாதிக்கும் வகையில் நீர் தேக்கங்கள் இருப்பதாக பெங்களூர் வாசிகள் கூறுகின்றனர்.
பீனிக்ஸ் மால் பிரதிநிதிகள் மனிகண்ட்ரோலுக்கு நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தினர். தண்ணீர் வெளியேற்றப்பட்டு, மால் இப்போது வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடியதாக உள்ளது.
2023-ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மால் பெங்களூரில் உள்ள மிகப்பெரிய மால்களில் ஒன்றாகும். இந்த மால் சர்ச்சையில் சிக்குவது இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் மால் திறக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பெங்களூரு போலீசார் மூட உத்தரவிட்டனர். இதற்கு முக்கிய காரணம் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தான்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது. பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். பெங்களூருவாசிகள் வானிலையை விட மோசமான உள்கட்டமைப்புகளைக் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications