கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA), இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பெங்களூருவின் கணிப்பு அடிப்படையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் பிடர், பிஜாப்பூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில், கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
கனமழையின் காரணமாகப் பெங்களூரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சென்னையை ஒப்பிடுகையில் பெங்களூரில் பெய்துள்ள மழை மிகவும் குறைவு தான். ஆனாலும் பல முக்கியமான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதில் முக்கியமாக மான்யதா டெக் பார்க் மற்றும் பெங்களூரிலேயே மிகப்பெரிய மால் ஆக விளங்கும் மால் ஆப் ஆசியா சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மால் ஆப் ஆசியாவுக்குள் நுழைவாயில் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதனால் இன்றைய வர்த்தகம் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நவீன கட்டமைப்புகள் உடன், நாட்டின் பிரபலமான தொழில்நுட்ப மையமாக வடிவமைக்கப்பட்ட மான்யதா டெக் பார்க், கனமழையின் காரணமாக மோசமான வெள்ளம் பாதிப்பால் மாட்டிக்கொண்டு உள்ளது.
பெங்களூரில் பெய்த தொடர் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவுட்டர் ரிங் ரோட்டில் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த மான்யதா டெக் பார்க் என்ற மிகப்பெரிய அலுவலக வளாகம், மழை வெள்ளத்தால் முற்றிலும் சூழப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில், மான்யதா டெக் பார்க்கின் சாலைகள், திறந்த வெளிகள் என அனைத்தும் நீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சில அலுவலகங்களின் அடித்தளங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, மான்யதா டெக் பார்க்கில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நேற்று மதியமே அனைத்து ஊழியர்களையும் வெளியேற அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று அனைவருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications