நம் நாட்டில் ஏராளமான கோடீஸ்வரர்கள் எக்கச்சக்கமான சொத்துகளையும் தொழில் சாம்ராஜ்ஜியத்தையும் வைத்துள்ளனர். அவர்களிடம் பல பெரிய பங்களாக்கள், வீடுகள், நிறைய கார்கள் இருக்கும்.
அப்படி அதிகப்படியான கார்களை வைத்திருக்கும் ஒருவர் தான் ரமேஷ் பாபு.
பெங்களூரை சேர்ந்த ரமேஷ் பாபு அவரிடம் 400க்கும் மேற்பட்ட கார்கள் சொந்தமாக உள்ளன. ரமேஷ் பாபு சவரத் தொழில் செய்பவர், ஆனால் சரியான நேரத்தில் சரியாக எடுத்த முடிவு இன்று பல கோடிக்கு அதிபதியாக மாற்றியுள்ளது.

பெங்களூர் ரமேஷ் பாபு-விடம் மெர்சிடஸ், ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் உள்ளன.
ரமேஷ் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 30 ஆண்டுகளாக பெங்களூரில் நடத்தி வருகிறார். 1993 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
ஆரம்பத்தில் ஒரு மாருதி ஆம்னி வேனை வைத்து தொழில் தொடங்கினார்.
இப்போது ரமேஷ் பாபு இந்தியாவின் கோடிஸ்வர பார்பர் ஆக உள்ளார்.
இன்றைக்கு ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக உள்ள ராமேஷும் அவரது குடும்பத்தாரும் அவரது தந்தை 1979 ஆம் ஆண்டில் காலமானபோது நிறைய பணப் பிரச்னைகளுக்கு ஆளாகினர். பெங்களூரின் பிரிகேட் ரோடில் ஒரு பார்பர் ஷாப்பை நடத்தி வந்த ரமேஷ் பாபுவின் தந்தை கோபால் மறைந்த போது அவருக்கு வயது 7.
தனது தந்தை மறைந்த பின்னர் அவரது சித்தப்பா குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். தினமும் குடும்பச் செலவுக்காக ரூ.5ஐ கொடுத்து வந்தார். தனது குடும்பத்துக்கு ஆதரவாக தனது 13 ஆவது வயதில் ரமேஷ் பாபு செய்தித்தாள்களை விநியோகிப்பது, பால் வியாபாரம் ஆகியவற்றை செய்து வந்தார்.
குடும்பத்துக்காக உழைத்து வந்த போதும் ரமேஷ் தனது கல்வியை ப்ரீ யூனிவர்சிட்டி வரை தொடர்ந்தார். பின்னர் தனது சித்தப்பாவிடமிருந்த சலூன் கடையை அவர் வாங்கிக் கொண்டார். ஒரே ஆண்டில் கடை நன்றாகப் போகத் தொடங்கியது.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பாபு 2023 ஆம் ஆண்டில் 400க்கும் மேற்பட்ட கார்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். நாட்டின் மிகப் பெரிய கார் கலெக்டராக உருவெடுத்தார். முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானி போன்ற கோடீஸ்வரர்களைக் காட்டிலும் அதிகக் கார்களை ரமேஷ் பாபு வைத்துள்ளார்.
ரமேஷ் பாபுவின் நிகர சொத்து மதிப்பு ரூ.1200 கோடி ஆகும். விலை உயர்ந்த கார்களை அவர் கடந்த 30 ஆண்டுகளாக சேகரித்து வருகிறார்.
சவரத் தொழிலை செய்து வந்தாலும் இதுபோன்ற கார் கலெக்ஷன் மற்றும் டிராவல் கம்பெனியின் மூலமாக கஷ்டப்பட்டு உழைத்து பல நூறு கோடிகளை ரமேஷ் பாபு சம்பாதித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications