கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே-இல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்த சில வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன, அதே வேளையில் தேர்தல் ஆணையமும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் , பெங்களூருவில் உணவகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை பகல் 12.55 மணிக்கு பெங்களூரு ஃப்ரூக்ஃபீல்டு பகுதியில் இருக்கும், தி ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெங்களூரு மாநகரில் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ-வும் விசாரணை நடத்தி வருகிறது.
காவல்துறையினர் தீவிர விசாரணை: ராமேஸ்வரம் உணவகம் மற்றும் பேருந்துகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குண்டுகள் அடங்கிய பையை உணவகத்தில் வைத்த நபரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இதை தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் 8ஆம் தேதி உணவகம் திறப்பு: இந்த சூழலில் ராமேஸ்வரம் உணவகத்தின் உரிமையாளர் ராகவேந்திர ராவ் , தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்த மாநில அரசு மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் சவாலான இந்த தருணத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.
எந்த ஒரு சக்தியாலும் நமது நாட்டின் ஒற்றுமையை குலைக்க முடியாது என தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த உணவகமானது மார்ச் 8ஆம் தேதி அதாவது மகா சிவராத்திரி என்று திறக்கப்படும் என அறிவித்துள்ளார். மீண்டும் நம்பிக்கையுடன் உணவகத்தை திறக்கிறோம் மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா தம்பதியினர் இணைந்து 2021இல் தி ராமேஸ்வரம் உணவகத்தை பெங்களூரு இந்திராநகரில் திறந்தனர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவாக அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தை கொண்டு தங்கள் கடைக்கு பெயர் சூட்டினர்.
தென்னிந்திய உணவு வகைகளை பாரம்பரியம் மாறாமல் பரிமாறுவதால் இவர்கள் கடையில் எப்போதுமே கூட்டம் தான். இங்கு பரிமாறப்படும் நெய் பொடி இட்லி மற்றும் மசாலா தோசை, லெமன் இட்லிக்கு வாடிக்கையாளர்கள் அனைவரும் அடிமை. இந்த கடையில் ஒரு மாதத்திற்கு 4.5 கோடி வருமானம் மற்றும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications