இந்தியாவின் சிலிக்கான் வேலியாக விளங்கும் பெங்களூரில் அடிக்கடி நெட்டிசன்களை வியக்க வைக்கும் சம்பவம் நடந்து வருகிறது. அரசியல், சினிமா தாண்டி பெங்களுரில் மக்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் மனிதர்கள் பற்றிய பதிவுகள் இணையதளத்தை புரட்டிப்போடுகிறது என்றால் மிகையில்லை.
இப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பெங்களூர் மொமண்ட்ஸ் என்று பட்டியல் போடும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரில் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்து அதன் பின்பு நடந்த சம்பவம் தான் தற்போது சமுகவலைத்தளத்தில் முக்கிய பேச்சாக உள்ளது.

பெங்களூரில் நிஷித் படேல் என்பவர் Kubernetes meetup செல்வதற்காக ரேபிடோ தளத்தில் பைக் டாக்சி புக் செய்துள்ளார். Kubernetes என்று தற்போது வேகமாக வளர்ந்து வரும் கிளவுட் சேவைகளில் பயன்படுத்தப்படும் ஒரு ஆடோட்டோமேட் செய்வதற்கான ஓப்பன் சோர்ஸ் பிளாட்பார்ம். இது பல இடங்களில் பல விதமான பயன்படுத்தப்படுகிறது. பெங்களூரில் இதுப்போன்று புதிய தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை, ஆய்வு செய்யும் பொதுவெளி கூட்டங்கள் நடக்கும்.
அப்படியொரு கூட்டத்திற்கு தான் நிஷித் படேல் செல்ல ரேபிடோ பைக் டாக்சி புக் செய்துள்ளார். டிரைவராக வந்தவர் சாதாரண பைக்கில் வராமல் ராயல் என்ஃபீல்ட் ஹன்டர் பைக்கில் வந்துள்ளார், பொதுவாக அதுப்போன்று பைக் டாக்சி ஓட்டுபவர்கள் குறைவான விலை கொண்ட வாகனத்தை தான் பயன்படுத்துவார்கள்.
ராயல் என்ஃபீல்ட் ஹன்டர் பைக்கில் வந்த உடன் நிஷித் படேல் வித்தியாசமாக தெரிந்த காரணத்தால் பேச துவங்கியுள்ளார். அப்போது தான் தெரிகிறது, டிரைவராக வந்தவர் ரேபிடோ நிறுவனத்தில் DevOps engineer என்றும் இவர் Kubernetes clusters-களில் பணியாற்றுகிறார் என்பதும்... இதை கேட்ட நிஷித் படேல்-க்கு தூக்கிவாரிப்போட்டு உள்ளது.

இதை மறக்காமல் டிவிட்டரில் பதிவிட்ட நிஷித் படேல் இதை யாராலும் நம்ப முடியாது.. ஆனால் இந்தியாவின் டெக் தலைநகரில் இது மற்றொரு சாதாரண நாளாக இருந்தாலும், பலருக்கு இது வியப்பாக இருக்கும் என தனது பதிவில் தெரிவித்தார்.
பெங்களூரில் யார் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, பஸ் ஸ்டாப்பில் ஒருவரிடம் நீங்கள் எலக்ட்ரானிக் சிட்டி பஸ் எப்போது வரும் என கேட்டிருந்தால் அவர் ஸ்டார்ட்அப் நிறுவனராக இருக்க வாய்ப்பு உள்ளது. இதுதான் பெங்களூர், வீட்டு ஓனர்களிடம் தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு முதலீடு பெறுவது முதல், புதிய ரூம்மேட் தேடும் படலத்தில் ஒரு co founder தேடுவது வரை பெங்களூரில் இயல்பான விஷயம் தான். ஏன்னா இது பெங்களூர்...


Click it and Unblock the Notifications