பெங்களூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை வீடுகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் வீட்டின் உரிமையாளர்கள் அதிகப்படியான தொகையை வாடகையாக வசூலித்து வந்தனர். இது பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாகவே இருந்தது.
இந்த நிலையில் பெங்களூர் ஐடி ஊழியர்கள் வாடகையை கொடுத்து சமாளிக்க முடியாமல் நகரின் மைய பகுதியில் இருந்து, குறைவான வாடகை கொண்ட புறநகர் பகுதிகளை நோக்கி இடம்பெயர துவங்கினர். பெங்களூர் புறநகர் பகுதியில் வாடகை வீடுகள் பெரியதாகவும், குறைவான வாடகையிலும் கிடைக்கும் காரணமே இந்த இடம்பெயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

வொயிட்ஃபீல்டு போன்ற ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் வீட்டு வாடகை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரையில் குறைந்துள்ளதாக ரியல் எஸ்டேட் ப்ரோகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் பெங்களூருவின் தென்-கிழக்குப் பகுதியான சர்ஜாபுராவில் ஐடி துறையில் பணிபுரியும் ஒரு தம்பதியர், சமீபத்தில் முக்கியமான சர்ஜாபுரா பகுதியில் இருந்து, சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புறநகர்ப் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் சர்ஜாபுராவில் 2BHK வீட்டிற்கு 35,000 முதல் 40,000 ரூபாய் வரை வாடகை செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், புறநகர்ப் பகுதியில் 3BHK வீட்டை மாதம் 38,000 ரூபாய்க்கு கிடைத்தது என்று கூறுகின்றனர்.
வொயிட்ஃபீல்டு, ஹூடி, அவுட்டர் ரிங் ரோடு, சர்ஜாபுரா ரோடு உள்ளிட்ட பகுதிகள் கிழக்கு ஐடி நிறுவனங்களின் ஹப் ஆக விளங்குகிறது. அதேசமயம், வார்த்தூர், குண்டலஹள்ளி, சன்னசந்திரா போன்ற புறநகர்ப் பகுதிகள் மலிவான வாடகை வீடுகளுக்கான தற்போது அதிகப்படியான கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, தற்போது அதிகமான வீடுகள் காலியாக இருப்பதால், வாடகைக்கு வீடு தேடுபவர்களுக்கு குறைவான வாடகையில் வீடுகளை பெற அதிக வாய்ப்புகள் உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரில் கடந்த 2 வருடத்தில் வீட்டு வாடகை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, உதாரணமாக 10000 ரூபாய் வாடகை கொண்டு இருந்த பல வீடுகள் தற்போது 15000 முதல்ல 18000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது. அதுவும் பெரிய அப்பார்ட்மென்ட், கூடுதலான வசதி கொண்ட அப்பார்ட்மென்ட் ஆக இருந்தால் வாடகை அளவு 100 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் தான் பெங்களூரில் தண்ணீர் பஞ்சம் வாடகையில் பெரிய ஓட்டை போட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications