பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. 2022 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் வீட்டு விலை பெங்களூரின் முக்கியமான பகுதியில் சராசரியாக 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2022ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியவர்களின் வீட்டின் மதிப்பு தற்போது குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகிறது.
பெங்களூர் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு முக்கியமான காரணம், இக்காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் இருந்த அதிகப்படியான தேவை மற்றும் புதிய வீடுகள் சந்தையில் அறிமுகம் ஆன உடனேயே விற்பனை ஆனது ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இக்காலகட்டத்தில் பெங்களூரில் சுமார் 2.49 லட்சம் புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இதில் 2.41 லட்சம் வீடுகள் விற்பனையாகின.

சர்ஜாபூர் - அத்திப்பள்ளி பகுதி
பெங்களூரில் உள்ள பல பகுதிகளில் விலை உயர்வு காணப்பட்டாலும், சர்ஜாபூர்-அத்திப்பள்ளி சாலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் மூன்று ஆண்டுகளில் வீட்டு விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது.
2022-இல் ஒரு சதுர அடிக்கு சராசரியாக 4,568 ரூபாயாக இருந்த விலை 2025-இல் இது 7,800-க்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பெங்களூரின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப துறை வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்த உயர்வு?
பெங்களூரில் சொந்த வீட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இதற்கு முக்கிய காரணம். புதிய வீடுகள் விரைவாக விற்பனையாகின்றன, குறிப்பாக 2025 வரையில் ஆடம்பர வீடுகள், விலை உயர்ந்த வீடுகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய வீடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
இதனால் விலை உயர்வு தொடர்கிறது. சர்ஜாபூர்-அத்திப்பள்ளி போன்ற பகுதிகள் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால் மக்கள் மத்தியில் அதிகப்படியான விரும்பு இடமாக மாறியது. இது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2026ல் நிலைமை வேற
ஆனால் 2026ல் நிலைமை மாறியுள்ளது, ஐடி துறையில் ரெசிஷன் என்று சொல்லாமலேயே ரெசிஷனுக்கான அனைத்து பாதிப்பும் உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஐடி துறையின் தலைநகரான பெங்களூரில் மோசமான பாதிப்பு தெரிய துவங்கியுள்ளது. இப்போது ரெசிஷன் ஏஐ மூலம் வந்துள்ளது.
தற்போது AI தொழில்நுட்பத்தால் பணிகளை ஆட்டோமேட் செய்யத் தொடங்கியுள்ளதால், ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையலாம், ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பெங்களூரில் இருக்கும் மக்கள் சொந்த வீட்டை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஐடி துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தற்காலிக பயமா அல்லது நீண்டகால பிரச்சினையின் தொடக்கமா என்பதை அடுத்த சில மாதங்களில் தெரியவரும். பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது IT துறையினரை மட்டுமே நம்பியிருப்பதால் 2026ல் இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications