இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் மதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நகரமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு இருக்கிறது. நகரின் பிரதான பகுதிகளான ஒயிட் ஃபீல்டு, சர்ஜாபூர் சாலை, அவுட்டர் ரிங் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது .இது ரியல் எஸ்டேட் விலையையும் உயர்த்தி வருகிறது.
நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை அதிகரித்து வருவதால் பெங்களூருவில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய பலரும் இந்த பிரதான பகுதிகளை கைவிட்டு விட்டு புறநகர் பகுதிகளுக்கு செல்கிறார்கள். வடக்கு பெங்களூரு, தேவனஹல்லி, எண்ணூர், தொட்டபலாபூர் பகுதிகளில் வீடுகளை வாங்க தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது பெங்களூருவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பகுதிகளாக இவை மாறி வருவதாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர் . பெங்களூருவில் டெக் நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமான விலை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
1 கோடி ரூபாய்க்கும் கீழ் பட்ஜெட் கொண்ட நபர்களுக்கு பெங்களூர் நகர் பகுதியில் தற்போது வீடு வாங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. எனவே இவர்கள் தானாகவே தற்போது புறநகர் பகுதிகளை நோக்கி தான் படையெடுக்கின்றனர். புறநகர் பகுதிகள் என பார்க்கும்போது வடக்கு பெங்களூரு, தேவனஹல்லி, எண்ணூர் , தொட்டபெல்லாபூர் சாலை ஆகிய பகுதிகளில் தற்போது ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் தீவிரமடைந்திருக்கின்றன .
ஆனராக் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ்குமார் கடந்த சில ஆண்டுகளாக புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் வேகம் எடுத்து இருப்பதாக கூறுகிறார் . குறிப்பாக பட்ஜெட் விலையில் வீடு நிலம் வாங்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு புறநகர் பகுதிகள் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன எனக் கூறுகிறார். அதுமட்டுமின்றி அரசும் புறநகர் பகுதிக்கும் நகர் பகுதியில் இருக்கக்கூடிய டெக் நிறுவனங்களுக்கும் இடையிலான போக்குவரத்து வசதிகளையும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக கூறுகிறார்.
பசுமையான சூழலில் மலிவு விலையில் வீடுகள் கிடைக்கின்றது என்பது புறநகர் பகுதிகளில் அதிக அளவு ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் நடப்பதற்கு காரணமாக இருக்கிறது என தெரிவிக்கிறார். வடக்கு பெங்களூருவில் இருக்கக்கூடிய தேவனஹல்லி பகுதியில் ரியல் எஸ்டேட் விலை 49 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறுகிறார். 2019 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடி 4900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அது தற்போது 7,400 ரூபாய் என உயர்ந்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார் .
இது எலக்ட்ரானிக் சிட்டியில் ரியல் எஸ்டேட் மதிப்பு 38 சதவீதம் தான் அதிகரித்திருக்கிறது ஆனால் புறநகர் பகுதியில் 49 சதவீதம் உயர்ந்திருக்கிறது எனக் கூறுகிறார். அடுத்து சில ஆண்டுகளிலும் இந்த பகுதிகளில் எல்லாம் ரியல் எஸ்டேட் ஆண்டுக்கு 12 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் . பெங்களூருவில் வீடு வாங்க வேண்டும் என விசாரணை நடத்துபவர்கள் பெரும்பாலானவர்கள் நகர் பகுதி வேண்டாம் எங்களுக்கு புறநகர் பகுதியில் வீடு வேண்டும் எனக் கூறுவதாக ஹனு ரெட்டி ரியால்டி நிறுவன தலைவர் கிரண் குமார் தெரிவிக்கிறார்.
தேவனஹல்லி, எண்ணூர் , தொட்டபெல்லாபூர் ஆகிய பகுதிகளுக்கு டிமாண்ட் அதிகரித்திருப்பதாகவும் இங்கெல்லாம் கேட்டட் கம்யூனிட்டிகளிலேயே 80 லட்சம் ரூபாய்க்கு வீடுகள் கிடைப்பதாகவும் தெரிவிக்கிறார் . அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வில்லாக்களை வாங்கும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications