பெங்களூர் மக்களின் புலம்பல்.. எல்லாமே கோடிக்கு மேல்,, மிடில் கிளாஸ் கண்ணீர்..!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் பட்ஜெட் விலை வீடுகள் விற்பனைக்கு வருவது 29 சதவீதம் வரை சரிவடைந்து இருப்பதாக நோ புரோக்கர் தளம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவிலேயே ரியல் எஸ்டேட் மதிப்புகள் வேகமாக வளரும் ஒரு நகரமாக பெங்களூரு இருக்கிறது. இங்கே அண்மைக்காலமாக மக்கள் ஆடம்பர குடியிருப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட ஆடம்பர குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதிலேயே கவனத்தை செலுத்துகின்றன. இதன் காரணமாக பெங்களூருவில் 40 லட்சத்திலிருந்து 80 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் போக்கு தற்போது குறைந்திருக்கிறது.

பெங்களூர் மக்களின் புலம்பல்.. எல்லாமே கோடிக்கு மேல்,, மிடில் கிளாஸ் கண்ணீர்..!

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வீட்டு விற்பனையில் இது 29 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நோ புரோக்கர் தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் வீடுகளை விற்பனை செய்வதை குறைத்து வருவதால் முதன்முறையாக வீடு வாங்க வேண்டும் என எண்ணுபவர்களும் மிடில் கிளாஸ் மக்களும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தங்களுக்கு போதிய வாய்ப்புகள் இல்லாமல் தற்போது தவித்து நிற்கின்றனர்.

மலிவு விலை வீடுகளை வாங்க வேண்டும் என எண்ணுபவர்கள் பெங்களூரு புறநகர் பகுதியில் அல்லது மறு விற்பனை செய்யப்படும் வீடுகளையே வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் பெங்களூருவில் 15,179 மலிவு விலை வீடுகள் விற்பனைக்கு வந்தன ,இது 2024 ஆம் ஆண்டில் 14,876 என குறைந்திருக்கிறது. ஆனால் பெங்களூருவில் ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன .

குறிப்பாக கேட்டட் கம்யூனிட்டிகளில் இருக்கும் வீடுகளை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். பெங்களூரில் 2023 ஆம் ஆண்டில் 15,071 ஆடம்பர குடியிருப்புகள் விற்பனைக்கு வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 23,000 என அதிகரித்து இருக்கிறது. பெங்களூருவில் ரியல் எஸ்டேட் சந்தை மாறி வருவதையே இது காட்டுவதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.

குறிப்பாக வடக்கு பெங்களூரு பகுதியில் இத்தகைய ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை அதிகரித்திருப்பதாக நோ புரோக்கர் தளம் வெளியிட்டு இருக்கும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே பெங்களூருவில் பட்ஜெட் விலையில் வீடு வாங்க வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தால் நகர்ப்புறங்களில் புதிய வீடுகளை வாங்குவது கடினம் இல்லை என்றால் மறு விற்பனைக்கு வரும் வீடுகளை வாங்கிக் கொள்ளலாம் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+