பெங்களூரில் வீட்டு வாடகை குறைந்து வருவது மக்களுக்கு பெரும் நம்மதியை கொடுத்தாலும், சொந்த வீடு வாங்க வேண்டும், சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பவர்களுக்கு இந்தியாவின் ஐடி ஹப் ஆக விளங்களும் பெங்களூர் ரியல் எஸ்டேட் தொடர்ந்து ஷாக் கொடுத்து தான் வருகிறது. இதிலும் இந்த 2 இரண்டு ஏரியாவில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
பொதுவாக ரியல் எஸ்டேட் முதலீடு பொருத்த வரையில் 10-15 ஆண்டில் தான் ஒரு இடத்தில் விலை இரண்டு மடங்கு உயரும், ஆனால் மிகவும் அரிதாக சில பகுதிகள் மட்டும் மிகவும் குறுகிய காலக்கட்டத்திலேயே அதன் மதிப்பு இரட்டிப்பாகும். இப்படி தான் பெங்களூரில் இரண்டு முக்கியமான பகுதியில் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

பெங்களூரில் பிரபலமான சர்ஜாபூர் ரோடு மற்றும் தனிசாந்திர மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 3.5 ஆண்டுகளில் சராசரி வீட்டு விலைகள் சுமார் 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனராக் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சி, இந்தியாவின் டாப் நகரங்களில் வீட்டு சந்தையில் ஒரு முக்கிய மாற்றத்தை குறிக்கிறது.
விலை உயர்வு
அனராக் தரவுகளின்படி, சர்ஜாபூர் ரோட்டில் சராசரி வீட்டு விலை 2021 இறுதியில் ரூ.6,050 சதுர அடிக்கு இருந்து, 2025 ஏப்ரல்-ஜூன் காலத்தில் ரூ.10,800 சதுர அடிக்கு 79 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல், வடக்கு பெங்களூருவில் அமைந்த தனிசாந்திர மெயின் ரோடுயில் விலை ரூ.5,345 சதுர அடியில் இருந்து 81 சதவீதம் உயர்ந்து ரூ.9,700 சதுர அடியாக உள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்:
சர்ஜாபூர் ரோடு, பெங்களூருவின் கிழக்கு ஐடி வளாகத்தின் ஒரு பகுதியாக நீண்டகாலமாக உள்ளது, ஆனால் ஹெப்பால் முதல் சர்ஜாபூர் வரை இணைக்கப்பட உள்ள ரெட் லைன் நம்ம மெட்ரோ திட்டம் தான் தற்போதைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதிலும் குறிப்பாக மஞ்சல் லைன் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இப்பகுதி மக்கள் மத்தியில் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அனராக் குறிப்பிட்டுள்ளது.
மறுபுறம், தனிசாந்திர மெயின் ரோடு, மன்யாடா டெக் பார்க்குக்கு அருகாமையில் அமைந்துள்ளதாலும், இப்பகுதியில் சமீபத்தில் செய்யப்பட்ட சாலை இணைப்பு மேம்பட்டதால், மிடில் மற்றும் அப்பர் மிடில் வருமானம் கொண்ட ஐடி ஊழியர்களை இப்பகுதியில் முதலீடு செய்ய தூண்டியுள்ளது.
வாடகை வருமானம்:
பெங்களூரில் இருக்கும் மக்கள் அதிகப்படியாக வாடகை வருமானத்திற்காகும் அதிக எண்ணிக்கையில் வீடுகளை வாங்கி வருகின்றனர். இதன் படில சர்ஜாபூர் ரோடு மற்றும் தனிசாந்திர மெயின் ரோடுயில் வாடகை வருமானும் 81 சதவீதம் அதிகரித்துள்ளது.
அனராக் தரவுகளின்படி, 2021 இறுதியில் இருந்து 2025 இரண்டாம் காலாண்டு வரை, நாட்டின் 7 முக்கிய நகரங்களில் உள்ள 14 முக்கிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு 24-139 சதவீதம் உயர்ந்துள்ளது, மேலும் வாடகை மதிப்பு 32-81 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications