இந்தியாவின் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் தலைநகரமாக இருக்கிறது பெங்களூரு. இந்த நகரத்தின் பொருளாதாரமே ஐடி துறை சார்ந்து தான் இருக்கிறது. ஐடி துறை வளரும் போது இந்த நகரத்தின் ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி அடையும், ஐடி துறை சரியும் போது ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் சரியும்.
ஐடி தலைநகர்: நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்காக பெங்களூருக்கு வருகை தந்த வண்ணம் இருப்பதால் ரியல் எஸ்டேட் சந்தை அங்கே வேகமாக வளர்ச்சியை அடைந்து வந்தது. குறிப்பாக ஐடி வேலைகளுக்காக வருகை தருபவர்கள் சொந்தமாக வீடு வாங்கும் போக்கு இருக்கிறது. இந்தியாவிலேயே மும்பைக்கு அடுத்த படியாக ரியல் எஸ்டேட் சந்தை வேகமாக வளரும் ஒரு நகரமாக பெங்களூரு நகரம் இருந்து வருகிறது.

ஐடி துறையில் ஏஐ: கடந்த சில ஆண்டுகளில் பெங்களூரில் ரியல் எஸ்டேட் சந்தை நல்ல லாபம் தரக்கூடிய ஒரு சந்தையாக இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அந்த நிலை மாறி வருவதாக அங்கு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் காரணமாக பல நிறுவனங்களும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. ஊழியர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கொண்டு தங்களுடைய பணிகளை மேற்கொள்கின்றன.
வீடு வாங்க தயக்கம்: 2022-23இல் பெங்களூரில் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்த அளவுக்கு கூட 2024-25 இல் உயரவில்லை என ரெடிட் தளத்தை சேர்ந்த ஒரு பயனர் தெரிவித்துள்ளார். பெங்களுருவை சேர்ந்த சம்பளதாரர்கள் வீடு வாங்குவதற்கு தற்போது தயக்கம் காட்டுகின்றனர் என கூறியிருக்கிறார். பெங்களூருவில் விலைவாசி உயர்வு, வாழ்க்கை செலவினம் அதிகரிப்பு, தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவை காரணமாக வீடு வாங்கும் முடிவை தள்ளி போட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐடி துறை மந்தநிலை: ஏஐ வருகையால் பெங்களூருவில் ஐடி துறையில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார மந்த நிலை பெங்களூரில் செயல்படும் ஐடி நிறுவனங்களின் வருமானத்தை குறைத்து இருக்கிறது. இதனால் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வதையும் நிறுத்தியுள்ளது.
வீடு வாடகை டிமாண்டும் குறைந்தது: ஐடி துறை வேலைகள் நிலையற்றவையாக மாறி இருப்பதும், ஏஐ வருகையும் பெங்களூருவில் செயல்படும் ஐடி நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது பெங்களூருவின் ரியல் எஸ்டேட் துறையில் மந்தமான போக்கை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் வீடு வாடகைக்கு தேடுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என அங்கே செயல்படக்கூடிய ரியல் எஸ்டேட் தரகர்கள் தெரிவிக்கின்றன . ஆனராக் குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கக் கூடிய பிரியங்கா கபூர், ஐடி துறையில் பணி பாதுகாப்பு இல்லாமல் போனதால் தற்போது புதிதாக வேலை கிடைத்து வருபவர்கள் கூட பெங்களூருவில் வீடுகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என கூறுகிறார்.
முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்: முதலீடு நோக்கத்தில் பெங்களூருவில் வீடுகளை வாங்கியவர்கள் தற்போது அவற்றை விற்பனை செய்வதற்கான நேரம் வந்துவிட்டதா என்று கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் பிரியங்கா கபூர், பெங்களூருவில் ரியல் எஸ்டேட் விலை சரியாது ஆனால் தற்போதைக்கு உயரவும் உயராது இதே அளவில் சில காலத்திற்கு தேங்கிவிடும், என கூறுகிறார். நீண்ட கால நோக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் இன்னும் சில காலம் காத்திருந்து தங்களுடைய சொத்துக்களை விற்பனை செய்யலாம் என அறிவுரை வழங்குகிறார்.
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications