ஐடி துறையில் ரெசிஷன் என்று சொல்லாமலேயே ரெசிஷனுக்கான அனைத்து பாதிப்பும் உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஐடி துறையின் தலைநகரான பெங்களூரில் மோசமான பாதிப்பு தெரிய துவங்கியுள்ளது. பொதுவாக ரெசிஷன் பொருளாதாரம் மற்றும் நிதி சந்தை அடிப்படையில் உருவாகும், ஆனால் இப்போது ரெசிஷன் ஏஐ மூலம் வந்துள்ளது.
ரெசிஷன் வரும் காலத்தில் டாலரில் வருமானம் ஈட்டும் அனைத்து இந்திய ஐடி நிறுவனங்களும் பாதிப்பு அடையும், அதேபோல் ஐடி மற்றும் டெக் துறையில் பணிநீக்கம் அதிகரிக்கும். டெக் ஊழியர்கள் செலவு செய்வதை குறைப்பார்கள், இதனால் ஐடி மற்றும் டெக் துறையையும், ஊழியர்களை சார்ந்து வர்த்தகம் செய்யும் ஹோட்டல் முதல் வங்கிகள் வரையில் பாதிக்கப்படும். இப்படி பல விஷயங்கள் நடக்கும். இதேபோல் பங்குசந்தையிலும் ஐடி துறையின் மூலம் வர்த்தக பாதிப்பு எதிர்கொள்ளும் நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.

அப்படி தான் பெங்களூரை தலைமையிடமாகவும், முக்கிய வர்த்தக பகுதியாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்துள்ளது. ஒருப்பக்கம் ஐடி பங்குகள் மோசமான சரிவை பதிவு செய்து கடந்த 8 நாட்களில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஐடி துறையை நம்பி வர்த்தகம் வர்த்தகம் செய்யும் மற்ற துறை வர்த்தகமும் பாதிப்படைய துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் Prestige Estates Projects, Oberoi Realty, Brigade Enterprises உள்ளிட்ட முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள் 4% வரை வீழ்ச்சியடைந்தன. இதனால் ரியல் எஸ்டேட் துறை இன்டெக்ஸ் மட்டும் 2%க்கும் மேல் சரிந்தது. இந்த சரிவுக்கு முக்கிய காரணம் IT துறையில் ஏற்பட்டுள்ள AI அச்சம்.
IT துறை பலவீனமானால் பெங்களூரு ரியல் எஸ்டேட் ஏன் பாதிக்கப்படுகிறது?
பெங்களூரு இந்தியாவின் ஐடி தலைநகரம் என்பதால் இங்கு Infosys, Wipro, TCS போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஐடி ஊழியர்கள், ரியல் எஸ்டேட் துறை வர்த்தகத்தின் மிகப்பெரிய பகுதியாக உள்ளனர்.
குறிப்பாக நடுத்தர மற்றும் பிரீமியம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை வாங்குபவர்களில் பெரும்பாலானோர் ஐடி துறை ஊழியர்கள் தான்.
தற்போது AI தொழில்நுட்பத்தால் பணிகளை ஆட்டோமேட் செய்யத் தொடங்கியுள்ளதால், ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையலாம், ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் வரும் காலத்தில் பெங்களூரில் வீடு வாங்கும் தேவை குறையும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
கொரோனாவுக்கு பின்பு ஏற்பட்ட மாற்றம்
கொரோனா காலத்தில் இந்திய சந்தையில் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறை அதிகரித்த நிலையில் வீடுகளின் விற்பனை குறைந்தது, பெரு நகரங்களில் வாடகை வாடுகளுக்கான டிமாண்டும் குறைந்தது. இதேபோல் வங்கியில் நிலவிய அதிகப்படியான வட்டி விகிதங்களும் வர்த்தகத்தை மந்தமாக்கியது.
இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு வொர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரம் குறைந்து, வங்கியில் வட்டி குறைந்த காரணத்தால் கடந்த 3-4 வருடங்களாக ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது. குறிப்பாக பெங்களூரில் ஆடம்பர, ப்ரீமியம் வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்தது.
எல்லாம் நன்றாக இருந்த வேளையில் இப்போது AI காரணமாக ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தைக்கு தலைவலியாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டு ஐடி ஊழியர்களின் வீடு கனவு பாதிப்பா?
தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் மிக அதிகம். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பெங்களூரில் வேலை செய்யும் இளைஞர்கள் லட்சக்கணக்கானோர் உள்ளனர். அவர்களில் பலர் பெங்களூரில் வீடு வாங்கி குடும்பத்துடன் தங்க திட்டமிட்டு வரும் வேளையில் ஏஐ பாதிப்பு பலரின் கனவை தகர்த்துள்ளது.
இப்போது ஐடி துறையில் AI காரணமாக வேலை இழப்பு அல்லது சம்பள உயர்வு தாமதம் ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதனால் பெங்களூரில் வீடு வாங்கும் கனவு தள்ளிப்போகலாம் அல்லது ரத்தாகலாம். இதனால் வீடுகளுக்கான டிமாண்ட் குறைந்து விலையும் குறையலாம், ஆனால் வாங்குவதற்கான மக்கள் எண்ணிக்கை குறையும் காரணத்தால் இது நடக்காது, இதேபோல் இதை ஐடி துறை அல்லாத மக்கள் பெரும் வாய்ப்பாக பார்க்கலாம்.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஐடி துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தற்காலிக பயமா அல்லது நீண்டகால பிரச்சினையின் தொடக்கமா என்பதை அடுத்த சில மாதங்களில் தெரியவரும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது பெங்களூரு சந்தையை மட்டும் சார்ந்திருப்பதால், IT துறையின் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்கள் இப்போது வீடு வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, ஐடி துறையில் AI திறன்களை மேம்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications