என்னது ஓரு அப்பார்ட்மெண்ட் 50 கோடியா.. பெங்களூர் மக்களே ஷாக் ஆகிட்டாங்கப்பா..!!

பெங்களூர்: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நகரமான பெங்களூருவில் பொதுவாகவே வீட்டு வாடகையும், ரியல் எஸ்டேட் விலையும் அதிகம். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள யூபி சிட்டி பலருக்கும் தெரிந்திருக்கும், இது பெங்களூர் நகரில் மிகவும் விலையுயர்ந்த ரியல் எஸ்டேட் சொத்துக்களில் ஒன்றாகும். இது கிங்பிஷர் ஏர்லையன்ஸ் உரிமையான விஜய் மல்லையா உருவாக்கியது.

யூபி சிட்டியை ஒட்டியுள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் என்பது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடமாகும். இது அல்ட்ரா-லக்ஷரி அபார்ட்மெண்ட் ஆக உருவாக்கப்பட்ட காரணத்தால் பல தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் விரும்பும் ஒரு இடமாக மாறியுள்ளது. இதனாலேயே பல வருடங்கள் ஆகியும் இந்த அப்பார்டமெண்ட் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக உள்ளது.

என்னது ஓரு அப்பார்ட்மெண்ட் 50 கோடியா.. பெங்களூர் மக்களே ஷாக் ஆகிட்டாங்கப்பா..!!

இந்த நிலையில் தற்போது யூபி சிட்டியின் கிங்ஃபிஷர் டவர்ஸ்-ல் ஒரு அப்பார்ட்மெண்ட் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஆரம்ப விலை மட்டும் ரூ.50 கோடி என தெரியவந்துள்ளது. இந்த தகவல் பெங்களூர் ரியல் எஸ்டேட் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான விஸ்டாரா-வை சேர்ந்த தரகர்களில் ஒருவர், விற்பனைக்கு வந்துள்ள 4BHK அபார்ட்மெண்ட் 8,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது என்றும், அப்பார்ட்மெண்ட் விற்பனைக்கு வந்த உடனே பல கோரிக்கைகளும், விசாரணைகளும் வந்து இறுதி முடிவுக்காக நிலுவையில் உள்ளன என்று கூறினார்.

மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த அபார்ட்மெண்ட் விஸ்டாரா நிறுவனத்தின் ஒரு தரகர் ரூ.5 கோடி முன்பணம் மற்றும் ரூ.45 கோடி இறுதி தொகைக்கு ப்ரீபுக்கிங் செய்யப்பட்டு உள்ளதாகவும், இறுதி முடிவுகளும் பத்திரப் பதிவும் விரைவில் நடக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விஸ்டாரா, கிங்ஃபிஷர் டவர்ஸில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, யூபி சிட்டியில் உள்ள இதே போன்ற அபார்ட்மென்டிற்கு ரூ.40 கோடிக்கு மற்றொரு பரிவர்த்தனையை நிறைவு செய்தது.

பெங்களூருவில் உள்ள ஒரு ஆடம்பர பகுதியாக பிரபலமாக அறியப்படும் யூபி சிட்டி-யில் ஒரு ஆடம்பர பொருட்களுக்கான மால் (தி கலெக்ஷன்) உள்ளது, இதோடு பெரிய அலுவலக இடங்கள் மற்றும் ஓக்வுட் சர்வீஸ் அபார்ட்மெண்டுகள், பல தரப்பட்ட ஆடம்பர சேவைகளை கொண்டுள்ளது. கிங்ஃபிஷர் டவர்ஸ் அல்லது பில்லியனர்களின் டவர் என்பது 34 மாடி ஆடம்பர குடியிருப்பாகும், இதில் சுமார் 81 அபார்ட்மெண்ட்கள் உள்ளன, இது அனைத்தும் 4 BHK வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவு பகுப்பாய்வு நிறுவனமான Zapkey நிறுவன தகவல் படி, இந்த அப்பார்ட்மெண்ட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும், இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி 2020 இல் சுமார் ரூ.29 கோடிக்கு ஒரு வீட்டை வாங்கினார். அதே ஆண்டில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபர் கிருஷ்ண சிவகுல ஜூனியர், ஒரு அபார்ட்மெண்டை ரூ.24 கோடிக்கு வாங்கினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+