பெங்களூர்: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூரில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து பணிபுரியும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக பெங்களூரில் அலுவலகத்திற்கான இடங்கள் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு எடுக்கப்படும் விகிதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை சில நாட்கள் அலுவலகத்திலும் சில நாட்கள் வீட்டில் இருந்தும் பணிபுரிய அனுமதித்தன. ஆனால் தற்போது அந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் பெங்களூரில் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால் பெங்களூரில் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கே சென்று பணிபுரிவதை காண முடிகிறது.

இதன் காரணமாக பெங்களூரில் அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்படுவது மற்றும் வாடகைக்கு எடுக்கப்படும் அளவு அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் ஏ தரத்திலான அலுவலக இடங்களுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பெருநகரங்களில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கும் அளவு முன்பை விட உயர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கியமான 6 நகரங்களில் 46.7 மில்லியன் சதுர அடி என அலுவலக இடங்களுக்கான தேவை உயர்ந்திருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதில் பெங்களூரில் மட்டும் நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் 6.3 மில்லியன் சதுர அடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளில் பெங்களூரில் அதிகபட்ச அளவு அலுவலக இடங்கள் லீசுக்கு எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படும் அளவு 31% வரை உயர்ந்துள்ளது என இந்த துறை சார்ந்து இயங்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் பெரும்பாலும் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுக்கின்றனவாம். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய இந்திய கிளைகளை அமைப்பதற்கு பெங்களூரையே பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. இதன் காரணமாகவும் பெங்களூரில் அலுவலகங்களுக்கான ரியல் எஸ்டேட் மதிப்பு அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களுடைய ஆய்வு மற்றும் மேம்பாட்டு அலுவலகங்களை நிறுவவும், செமி கண்டக்டர் துறைக்கான நிறுவனங்கள், டேட்டா மையங்கள் , ஏஐ சார்ந்த நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதன் காரணமாகவும் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
பெரு நகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் வொர்க் ப்ரம் ஹோம் கட் செய்யும் காரணத்தால் அலுவலக இடங்களுக்கான டிமாண்ட் அதிகரிப்பது போலவே வாடகை வீடுகளுக்கான டிமாண்டும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் முக்கியமான பகுதிகளில் வீட்டு வாடகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications