இந்தியாவின் சிலிக்கான் வேலி என போற்றப்படும் பெங்களூரில் வாடகைக்கு கிடைக்கும் வீடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் வீட்டு வாடகை 40 சதவீதம் உயர்ந்துள்ளன. இது ஒருப்பக்கம் இருக்க காலியாகி இருக்கும் வீடுகளை தேடி பிடித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வீட்டு ப்ரோக்கர்கள் தற்போது புதிய சேவையை உருவாக்கியுள்ளனர்.
பெங்களூரில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கும் வேளையில் காலியாக இருக்கும் வீடுகளை தேடிப்பிடிப்பதில் அதிகப்படியான சவால் இருக்கும் காரணத்தால் இதை சமாளிக்க புது புது ஐடியாக்களும், சேவைகளும் வந்துள்ளது. இதில் முக்கியமான ஒன்று field agents.

பொதுவாக வீட்டு ப்ரோக்கர்கள் கையில் சில வீடுகள் எப்போதும் இருக்கும், தற்போது டிமாண்ட் அதிகமாகவும் காலியான வீடுகள் குறைவாக இருக்கும் காரணத்தால் ப்ரோக்கர்கள் field agents நியமித்துள்ளனர். இந்த field agents பெங்களூரின் முக்கிய பகுதிகளில் காலியாக இருக்கும் வீடுகளின் பட்டியலை தயாரிப்பது ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் பிஸ்னஸ் செய்கின்றனர். இதன் மூலம் பெங்களூர் ரியல் எஸ்டேட் துறையில் field agents வேலைவாய்ப்பு புதிதாக உருவாகியுள்ளது.
இதுமட்டும் வீட்டு ப்ரோக்கர்கள் மற்றொரு முக்கிய சேவையை கொண்டு வந்துள்ளனர், இதன் பெயர் 'ஹவுஸ் ஹன்ட் பேக்கேஜ்கள்' ('house hunt packages') ஆகும். அதாவது வாடகை வீட்டை தேடுவோருக்கு பணியை எளிதாக்க ப்ரோக்கர்கள் காலியாக இருக்கும் வீட்டுக்கு அழைத்து செல்ல பேகேஜ் வடிவில் சேவை துவங்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக 10,000 ரூபாயில் இந்த பேகேஜ்கள் துவங்குகிறது. பெங்களூரில் சுமார் 5-6 பகுதிகளில் இருக்கும் காலி வீடுகளை அழைத்து சென்று சுற்றிக்காட்டுவது தான் இந்த house hunt packages. கிட்டதட்ட ஒரு டூர் பேகேஜ் போலவே இயங்கும் இந்த சேவையில் ஹேட்ச்பேக் அல்லது செடான் கார்களில் வாடிக்கையாளர்களை பிக்-அப் மற்றும் டிராப் செய்யும் வசதியை ப்ரோக்கர்கள் அளிக்கின்றனர்.

பெங்களூருவை தளமாகக் கொண்ட Realty Corps இன் நிறுவனர் சுனில் சிங் கூறுகையில் house hunt packages சேவையில் வணிக வளாகங்கள், உணவகங்கள் அல்லது பிற இடங்கள் என வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப பொழுதுபோக்கிற்கான சுற்றுப்பயணங்களும் பெங்களூர் நகரங்களில் அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
சுனில் சிங் Realty Corps பொதுவாக விமான நிலையத்திலிருந்து பயணிகளை குறிப்பாக வெளிநாட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு பிக்-அப் மற்றும் டிராப் வசதியை வழங்குகிறது. இது வெளிநாட்டினர் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால், இதில் மக்கள் அதிகளவில் சவால்களை எதிர்கொண்டு வரும் காரணத்தால் Realty Corps நிறுவனம் house hunt packages சேவையை அறிமுகம் செய்துள்ளது.
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications