பெங்களூரா இது.. எல்லாம் தலைகீழாக மாறிக்கிட்டு வருது.. ஐடி துறையால் வந்த வினை..!!

இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் கடந்த 2 வருடமாக வீட்டு வாடகை பெரிய அளவில் அதிகரித்து வந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. பிரதான பகுதிகளில் கூட குறைந்த வாடகையில் வீடுகள் கிடைக்க துவங்கியுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

பெங்களூரு நகரின் வீட்டு வாடகை சந்தை, கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சரிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிரீமியம் அபார்ட்மென்ட்களின் வாடகைகள் கடுமையாக குறைந்துள்ளன.

பெங்களூரா இது.. எல்லாம் தலைகீழாக மாறிக்கிட்டு வருது.. ஐடி துறையால் வந்த வினை..!!

சமீபத்தில் 3 பெட்ரூம் அபார்ட்மென்ட்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர்கள், தற்போது ரூ.35,000 முதல் ரூ.55,000 வரை குறைத்துள்ளனர். இது கிட்டத்தட்ட 25-30 சதவீத குறைவாகும்.

பெங்களூரு நகரின் மேற்கு பகுதியில் உள்ள ராஜாஜிநகர், வடமேற்கு பகுதியில் உள்ள பாசவேஸ்வர நகர் மற்றும் மல்லேஸ்வரம் போன்ற பகுதிகளில் வாடகை அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இந்த பகுதிகளில் இளம் தலைமுறையினர் குறிப்பாக IT வேலைக்காக வெளியிருந்து வருபவர்கள் குறைவாகவே தங்குகின்றனர், இதனால் இப்பகுதியில் வாடகை வீடுகளுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது.

பெங்களூரில் திடீரென வாடகை குறைய பல காரணங்கள் உள்ளது. சமீபத்தில் கட்டப்பட்ட புதிய அபார்ட்மென்ட்கள் அதிக அளவு சந்தையில் வந்துள்ளது இதனால் தேவைக்கு அதிகமாக வீடுகள் உள்ளது. இதை தொடர்ந்து IT மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் புதிய பணியாளர்களின் சேர்ப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது இதனால் புதிதாக பெங்களூர்-க்கு வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் வாடகை குறைந்தாலும் இந்திரநகர் மற்றும் HSR லேவுட் போன்ற முக்கிய ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருக்கும் பகுதிகளில் வாடகைகள் நிலையாக உள்ளன, ஆனால் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற தெற்கு IT பகுதிகளில் புதிய அபார்ட்மென்ட்களின் அதிக அளவுக்கு வந்துள்ள காரணத்தால் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை குறைக்க தயாராகி வருகின்றனர்.

பொதுவாக, பெங்களூரு வாடகை வீட்டின் சந்தை ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தான் உச்சம் பெறும், ஏனெனில் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு மக்கள் தங்களுடைய வீட்டை மாற்ற திட்டமிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு பலர் இடம்மாறுவதை தள்ளி வைத்துள்ளனர், இதனால் வாடகை வீட்டு சந்தையில் தற்காலிக மந்த நிலை உருவாகியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், வொயிட்ஃபீல்டு போன்ற பகுதிகளில் வீட்டு வாடகை 25-30 சதவீதம் அதிகரித்த நிலையில், தற்போதைய மந்த நிலையில் சாமானிய மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த மந்த நிலைக்கு ஐடி துறை பணிநீக்கம், பிரஷ்ஷர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்தது என பல பிரச்சனைகள் முக்கிய காரணமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+