பெங்களூர் வீட்டு ஓனர் அட்ராசிட்டி,.. அடுக்கடுக்கான புகார்.. ட்விஸ்ட் வைத்த நெட்டிசன்கள்..!!

பெங்களூருவில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர், தனது வீட்டு உரிமையாளர் மீது ரெடிட் வலைதளத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆரம்பத்தில் வீட்டு உரிமையாளர் மிகவும் நல்லவராக இருந்தார். ஆனால், சில நாட்களுக்கு பிறகு சிரமம் தரும் வகையில் நடந்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், உரிமையாளர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் அவர் பகிர்ந்துள்ளார். உரிமையாளர் அடிக்கடி மெசேஜ் அனுப்பி தன்னை தொந்தரவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த வீட்டு உரிமையாளர் வாடகைதாரரிடம் மிகவும் நியாயமான கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதாவது, மழை வரும் நேரத்தில் ஜன்னல் கதவுகளை மூட வேண்டும் என்றும் கூடுதல் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக டெலிவரி ஊழியர்கள் 2ஆம் மாடிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்றும் வீட்டு உரிமையாளர்கள் கூறியுள்ளார்.

பெங்களூர் வீட்டு ஓனர் அட்ராசிட்டி,.. அடுக்கடுக்கான புகார்.. ட்விஸ்ட் வைத்த நெட்டிசன்கள்..!!

ஆனால், இது எந்த விதத்தில் தவறு என்பதை உணர்ந்து கொள்ளாத வாடகைதாரர், இதை ரெடிட் தளத்தில் வாட்ஸ் அப் சேட்டுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், வாடகைக்கு குடியிருந்தவரைத்தான் அதிகம் விமர்சித்துள்ளனர். சிலர், "உரிமையாளர் தவறாக எதையும் கூறவில்லையே" என கேட்டுள்ளன. மற்றவர்கள், "உண்மையில் யார்தான் பிரச்சனை செய்கிறார்கள்"? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பலர், "இவர் தான் பொறுப்புள்ள வீட்டு உரிமையாளர் என்றும் இதில் என்ன தவறு இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், இது போன்ற சாதாரண விஷயங்களைப் பெரிதுபடுத்தி, சமூக ஊடகங்களில் புகாரளிப்பது நியாயமற்றது என்றும் விமர்சனம் செய்தனர்.

பெங்களூர் வீட்டு ஓனர் அட்ராசிட்டி,.. அடுக்கடுக்கான புகார்.. ட்விஸ்ட் வைத்த நெட்டிசன்கள்..!!

இதில் ஒரு பயனர், வாடகைதாரருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில், "சின்ன சின்ன விஷயங்களுக்காக முறையிடுவது, தொடர்ந்து கண்காணித்து தொல்லை கொடுப்பது என்பது நல்ல உரிமையாளராக இருக்க முடியாது. நான் வாடகைக்கு எடுத்த வீட்டில் ஜன்னல் திறந்து விட்டு, மழை நீர் என் பொருட்களில் பொழிந்தால் உரிமையாளருக்கு என்ன..? இதனால், அவருக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது..? ஒரு 1BHK வீட்டில் இரண்டு பைக்குகள் நிறுத்தப்படுவது தற்காலிகமானதாக தான் இருக்கும். ஏனென்றால், நண்பர்கள் வருகை தந்திருப்பார்கள்.நான் ஒரு பைக் நிறுத்தினாலும், இரண்டு பைக் நிறுத்தினாலும், அது முறையாக நிறுத்தப்பட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்றார்.

மற்றொரு நபர், "வாடகைதாரர்கள் ஒன்றும் வீட்டு உரிமையாளரின் அடிமை கிடையாது. இலவசமாக யாரும் வீட்டில் தங்குவது இல்லை. இந்தச் சிறிய விஷயங்களுக்கு உங்களை கீழே பார்க்க வைக்கும் விதம் மிகவும் தொல்லை அளிக்கும். வீட்டில் எதையும் பழுதுபார்க்க உரிமையாளரிடம் சொல்ல வேண்டாம் என்று நான் நினைக்கிறேன். உரிமையாளரிடம் தேவையில்லாத உரையாடல்களைத் தவிர்க்க, வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களையோ அல்லது ஏதேனும் பழுதுகள் இருந்தால் அதை நானே பார்த்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் ஆதரவு கிடைக்கும் என நினைத்து வெளியிடப்படும் சில புகார்கள், பல நேரங்களில் எதிர்வினையாகவே மாற வாய்ப்புள்ளது என்பதற்கான ஒரு உதாரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+