பெங்களூர் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நகரம், தினமும் பல ஆயிரம் மக்கள் இந்நகரத்திற்கு வேலை, வர்த்தகம், படிப்பு என வரும் காரணத்தால், பெங்களூரில் எப்போதும் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் இருக்கும். இதேபோல் பெங்களூரில் வீட்டு வாடகை வேகமாகவும், அதிரடியாகவும் உயரும் காரணத்தால் அவ்வபோது தலைப்பு செய்தியாக மாறி வருகிறது.
இந்த முறை வாடகை வீட்டை தேட ஒரு நபர் எதிர்கொண்ட பிரச்சனை தான் தற்போது சமூகவலைத்தளத்தில் பெரும் அதிர்ச்சியை பலருக்கும் கொடுத்துள்ளது. மற்ற நகரங்களை போல் பெங்களூரில் வாடகை வீட்டை தேடுவது எளிதான காரியமில்லை. வீட்டை வாடைகைக்கு பெற படிப்பு, வேலை, சம்பளம், குடும்பத்தார் என்ன வேலை செய்கிறார்கள் என்பது வரையில் வீட்டின் உரிமையாளர்கள் தற்போது கேட்பது வழக்கமாகிவிட்டது.

இதேபோல் காலியாக இருக்கும் வீட்டை பார்க்க வேண்டும் என்றால் பல தடைகளை தாண்டி தான் செல்ல வேண்டிய நிலை பெங்களூரில் உள்ளது. வீட்டின் உரிமையாளரை நேரடியாக பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்கு முக்கிய காரணம் பெங்களூரில் பெரும்பாலான வாடகை வீடுகள், ப்ரோக்கர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இதேபோல் வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பார்கள், இதனால் பெங்களூர் வாடகை வீட்டு சந்தையில் இடைதரகர்களின் ராஜ்ஜியம் தான். இப்படி தான் ஒரு இளம் டெக்கி ஒருவரிடம் மாடிக்கொண்டு உள்ளார்.
பெங்களூரில் வாடகை வீடு தேடும் ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை ரெட்டிட் வலைதளத்தில் பதிவு செய்துள்ளது மூலம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வேலைக்காக பெங்களூருக்கு வந்த இந்த இளைஞர் ரெடிட் தளத்தில் தனது வீடு தேடும் அனுபவத்தில் எதிர்கொண்ட விசித்திரமான சம்பவத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்ததுள்ளது. இந்த இளைஞர் ஒரு அடுக்குமாடி கட்டிடம் பக்கம் வந்தபோது, வாடகைக்கு வீடு காலியாக உள்ளதா என்று வெளியில் இருக்கும் பாதுகாவலரிடம் கேட்டுள்ளார். பாதுகாவலர் உடனே ஒரு யூனிட் காலியாக இருப்பதாகக் கூறி உரிமையாளரின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
இந்த இளைஞர் உரிமையாளரை போனில் அழைத்து பேசினார். வீட்டை காட்டுவதற்கு பாதுகாவலர் வருவார் என்று உரிமையாளர் கூறினார். இது தான் திரில்லிங் ஆன இடம்.
இந்த இளைஞர் உரிமையாளரிடம் பேசும் போது புரோக்கரேஜ், டெபாசிட் அல்லது கூடுதல் கட்டணம் பற்றி எதையும் பேசவில்லை. இது சாதாரணமானது தான், வீட்டை பிடித்தால் மட்டுமே அடுத்தக்கட்ட பேச்சுக்கள் இருக்கும்.
இந்த நிலையில் இந்த நபர் வீட்டை பார்க்க வேண்டுமென பாதுகாவலரிடம் கேட்டபோது தான் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது. வீட்டை காட்டுவதற்கு ஒரு மாத வாடகை தொகையை முன்கூட்டியே கொடுக்க வேண்டும் என்று அந்த பாதுகாவலர் கேட்டுள்ளார்.
வீட்டை திறந்து காட்டுவதற்கு பணம் கேட்கிறார்கள், இதுதென்ன புது பிஸ்னஸா அல்லது புது ஏமாற்று வேலையா என, தான் குழப்பம் அடைந்தாகவும். மீண்டும் பாதுகாவலரிடம் வீட்டை காட்டுவதற்கு 1 மாத வாடகையா என கேட்டுள்ளார், இதற்கு அவரும் ஆம் என கூறியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பெங்களூரு வாடகை வீடு தேடும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். வாடகை வீடு தேடும் போது பாதுகாவலர்கள், புரோக்கர்கள் மூலம் ஏற்படும் இத்தகைய சிக்கல்கள் பெங்களூரில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாடகை வீடு தேடுபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை பார்ப்பதற்கு முன்பே பணம் கேட்கும் இத்தகைய சம்பவங்கள் உங்களுக்கு நடந்துள்ளதா..? கமெண்ட் செய்யவும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications