எரியுதடி மாலா.. பெங்களூரில் களைகட்டும் வாடகை ஏசி.. மாசம் எவ்வளவு தெரியுமா..?

ஃபிரிட்ஜ்-ல் வைத்திருப்பது போல் இருக்கும் பெங்களூர் தற்போது தந்தூரி அடுப்பில் இருப்பது போல் உள்ளது, கிட்டதட்ட சென்னைக்கு நிகரான வெயில் பெங்களூரில் உள்ளது. பெங்களூர் என்றாலே குளிர்ச்சியான, ஊருக்கே ஏர் கண்டிஷனர் போட்டு உள்ள நகரம் என்ற கதையெல்லாம் மலையேறிவிட்டது.

இந்த ஆண்டு பெங்களூருவில் நிலவி வரும் கடும் வெயில், மக்களைப் புலம்ப வைத்துள்ளது. தினமும் ஒரு முறையாவது கொளுத்தும் வெயில் பற்றி மக்கள் பேசாமல் இருப்பது இல்லை. இதனாலேயே வொர்க் ப்ரம் ஹோம் செய்தவர்கள் எல்லாம் அடித்து பிடித்து 8-9 மணிக்கெல்லாம் அதாவது வெளியில் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே ஆபீஸ் வருகிறார்கள், காரணம் ஏசி மட்டுமே.

எரியுதடி மாலா.. பெங்களூரில் களைகட்டும் வாடகை ஏசி.. மாசம் எவ்வளவு தெரியுமா..?

மார்ச் 30ஆம் தேதி பெங்களூரில் 36.6° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. 2017ஆம் ஆண்டில் பதிவான 37.2° செல்சியஸ் வெயிலுக்கு அடுத்தபடியாக இது மார்ச் மாதத்தின் இரண்டாவது அதிக வெப்பநிலையாகும்.

ஏப்ரல் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. 2016ஆம் ஆண்டில் பதிவான 39.2° செல்சியஸ் வெயிலுக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 38.5° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இதேபோல் நேற்றும், இன்றும் பெங்களூரில் பெய்த மலை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டும் அல்லாமல் பலரை மழையில் குத்தாட்டமும் போட வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

மே 1ஆம் தேதி பதிவான வெயில் 38.1° செல்சியஸ். 1931ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 38.9° செல்சியஸ் என்ற சாதனை வெயிலை இந்த ஆண்டு முறியடிக்குமா? அல்லது பெங்களூரின் வரலாற்றிலேயே முதல் முறையாக 40° செல்சியஸ் வெயில் பதிவாகுமா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

இதனால் பெங்களூரில் ஏசி விற்பனை அதிகரிப்பது ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் வாடகை ஏசி வர்த்தகம் மிகப்பெரிய அளவில் சூடுபிடித்துள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களும், அடிக்கடி வீடு மாறுபவர்களும் பெரும்பாலும் ஏசி வசதியைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், வாடகை ஏசிக்களுக்கான தேவை பெங்களூரில் அதிகரித்து வருகிறது.

டெக் நகரமாக விளங்கும் பெங்களூரில் நிலவி வரும் கடும் வெயில், ஏசி மற்றும் ஏர் கூலர்களின் விற்பனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வாடகை ஏசிக்களுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் ஏசி வாடகை சேவை பல வருடங்களாக இருந்தாலும், பெங்களூரில் இப்போதுதான் பிரபலமடைந்து வருகிறது.

Rentomojo, Cityfurnish, Furlenco போன்ற ஸ்டார்ட்-அப்கள் வாடகைக்கு ஏசி வழங்குகின்றன. தற்போது பெங்களூரில் அதிக தேவை இருக்கும் காரணத்தால் மிகக் குறைந்த அளவிலேயே ஏசிக்கள் கிடைக்கிறது. ஸ்டாக் வந்த உடனேயே மாயமாகிவிடுகிறது.

இந்த வாடகை சேவை அளிக்கும் ஸ்டார்ட்-அப்கள் ஏசி உற்பத்தியாளர்களுடன் இணைந்து மொத்தமாக ஏசிக்களை வாங்குகின்றன. பின்னர், Porter போன்ற லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஏசிக்களை டெலிவரி செய்கின்றன.

மேலும், Urban Company போன்ற வீட்டுச் சேவை நிறுவனங்களுடன் இணைந்து ஏசிக்களை பொருத்திப் பராமரிப்பு செய்கின்றன. இது மிகப்பெரிய பிஸ்னஸ் ஆக விரைவில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையெனில் வெயில் காலத்தில் மட்டும் இந்த பிஸ்னஸ் சூடுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

மக்கள் இந்த ஸ்டார்ட்-அப்களின் மொபைல் ஆப் டவுன்லோடு செய்து, வாடகை கால அளவைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். KYC செயல்முறை முடிந்ததும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏசி வீடுகளுக்கு அனுப்பப்படும். இந்த ஸ்டார்ட்-அப்கள் வழங்கும் வாடகை மாதத்திற்கு ரூ.1,500 முதல் 2000 ரூபாய் வாடகையாக வசூலிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+