சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூர் சமீபத்தில் பலத்த மழையின் காரணமாக பல்வேறு பிரச்சனையை எதிர்கொண்டது. மழையின் போது தெருக்கள் நீர் தேங்கிய ஆறுகளாக மாறின. மேலும் போக்குவரத்து நெரிசல்கள், மழை நீரில் மூழ்கிய பாதைகள், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் என பல்வேறு சவால்களை பெங்களூர் மக்கள் எதிர்கொண்டனர். பெங்களூரில் டிரைனேஜ் வசதி சரியாக இல்லை என்று மக்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்.
கனமழை தற்போது ஓய்ந்து உள்ளதால் படிப்படியாக பெங்களூர் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. இதற்கு மத்தியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான டாக்டர் APJ அப்துல் கலாமின் இல்லமான கேந்திரிய விகாரின் அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த ஒரு பகுதியில் மீன்கள் நீந்துவதை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.

எனவே அங்குள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடித்தளத்தில் இருந்த தண்ணீரை எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக மீன்களை பிடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
டெக் பார்க் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது: இந்தியாவின் மிகப்பெரிய அலுவலக வளாகங்களில் ஒன்றான மன்யாதா டெக் பார்க், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த டெக் பார்க் நீரில் மூழ்கியது. சமூக ஊடகங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக் பார்க்கின் வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டன. இதனால், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்ப பூங்காவிற்குள் உள்ள கட்டுமான தளத்தில் ஒரு அணைக்கட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனையடுத்து பலரும் "மன்யாதா டெக் நீர்வீழ்ச்சி" என்று அப்பகுதியை கிண்டலாக அழைத்தனர். ஏனெனில் பார்ப்பதற்கு நீர்வீழ்ச்சி போலவே தண்ணீர் மேலிருந்து கீழே பெருக்கெடுத்து ஓடியது.
இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் இந்த சுவர் சரிந்து விழுந்தது. தீவிர வானிலை நிகழ்வுகள் நகரத்தின் உள்கட்டமைப்பை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தச் சம்பவம் பெங்களூரு உள்கட்டமைப்பு மற்றும் வடிகால் வசதிகளில் இருக்கும் கடுமையான சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது.
ஆனால் பெங்களூரில் தற்போது இயல்பு நிலை மாறி வருகிறது. மழை ஓய்ந்த பிறகு, டெக் பார்க் மேனேஜ்மென்ட் மழை நீரை வெளியேற்றி, சாலைகளை சுத்தம் செய்ததால், ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப முடிந்தது.


Click it and Unblock the Notifications