பெங்களூர் பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்று. இங்கு பல பில்லியனர்களும் தங்களுக்கு சொந்தமாக ஒவ்வொரு குடியிருப்புகளை வெவ்வேறு பகுதிகளில் வைத்திருக்கின்றனர். முன்னணி தொழில்நுட்ப மையமாக இருப்பதால் இந்த பகுதிகளில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் சொத்து விலைகள் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளன. அதுவும் சில பகுதிகளில் எல்லோராலும் இடம் வாங்க முடியாத நிலையும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் கோரமங்களாவின் 3-வது பிளாக். பெங்களூருவின் "பில்லியனர் ஸ்ட்ரீட்" என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் சொத்து விலைகள் பிற பகுதிகளை விட காஸ்ட்லி.
சவுத் ஈஸ்ட் பெங்களூரில் உள்ள இந்தப் பகுதி, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் வரை பல்வேறு பணக்காரர்களை ஈர்த்து வருகிறது. அவ்வப்போது பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்து பில்லியனர்கள் இங்கு சொத்து வாங்கியது குறித்த தகவல்கள் செய்திகளில் வெளியாகும்.

பெங்களூரின் ரியல் எஸ்டேட் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக குவெஸ் கார்ப் நிர்வாக இயக்குனரான அஜித் ஐசக் 10,000 சதுர அடி நிலத்தை இந்தப் பகுதியில் ரூ.67.5 கோடி கொடுத்து வாங்கினார். அதற்கு முன்னதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் "பில்லியனர் ஸ்ட்ரீட்" பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தை ரூ. 68,597 என்ற விலையில் வாங்கியது. இந்தப் பகுதிகளில் தொடர் விலை அதிகரிப்புக்கு காரணம் இங்கு தேவை அதிகம் இருந்தும் இடம் குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Housing.com-இன் தரவுகளின் படி கோரமங்களா 3-வது பிளாக்கில் சொத்து விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் சொத்து விலைகள் தோராயமாக 9.5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. தற்போது இங்கு 1 சதுர அடி நிலம் 35,000 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலண்டோடு ஒப்பிடுகையில் மிகவும் 3,000 ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் 32,000 ரூபாய்க்கு ஒரு சதுர அடி விற்பனை செய்யப்பட்டது.
பிரத்தியேகமாக இந்த 3-வது பிளாக் தான் உயர் சொத்து விலைகளைக் கொண்டு முன்னணியில் உள்ளது. ஏனெனில் இங்கு பில்லியனர்கள் மற்றும் வணிக ஜாபவான்கள் மட்டுமே இடங்களை வாங்கி வருகின்றனர்.
வசதிகள்: ஆடம்பர குடியிருப்புகக்கு அப்பால், இந்தப் பகுதி பன்னேர்கட்டா சாலை, பெல்லந்தூர் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுக்கும், சிறந்த பள்ளிகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் சுகாதார வசதிகளுக்கும் அருகாமையில் உள்ளது.
பிசினஸ் டைக்கூன்களின் குடியிருப்பு: ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்கள் நந்தன் நிலேகனி மற்றும் கிறிஸ் கோபாலகிருஷ்ணன், மற்றும் நாராயணா ஹெல்த் நிறுவனத்தின் டாக்டர் தேவி ஷெட்டி உள்ளிட்ட நபர்கள் இந்த இடத்தை தங்கள் வீடாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தப் பகுதியின் கட்டிடக்கலை பாரம்பரிய வில்லாக்கள், நவீன வீடுகள் ஆகியவை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பல சொத்துக்கள் தனியார் தோட்டங்கள், குளங்கள் மற்றும் ஜிம்கள் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளையும், சோலார் பேனல்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற இலை முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளன.
ஸ்கொயர் யார்டின் தரவுகளின் படி கோரமங்களாவில் ஒரு சதுர அடி விலை 2024-ஆம் ஆண்டில் 19,149 ரூபாயாக உயர்ந்தது. இது 2023-ஆம் ஆண்டில் 13,355 ரூபாயாக இருந்தது. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 40 சதவீதம் வரை சொத்து விலைகள் அதிகரித்தன. அதேபோல இந்த பகுதியில் வாடகை விலைகளும் அதிகம். 2023 ஆம் ஆண்டில் ரூ.49,500 முதல் ரூ.90,000 ஆக இருந்த வீட்டு வாடகை 2024-ஆம் ஆண்டில் 48,000 முதல் 1,34,400 ரூபாய் வரை அதிகரித்தது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்



Click it and Unblock the Notifications