பெங்களூரு நகரம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் இதயமாகத் திகழ்கிறது. 'இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு' என்ற பெயரை பெற்று விளங்கும் பெங்களூருவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். முன்னணி நிறுவனங்களின் தலைமையகங்கள், ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் உயர் தொழில்நுட்ப வளாகங்களால் இங்கு தொழில்நுட்ப வாழ்க்கை வேகமாக முன்னேறி வருகிறது. நாள் முழுவதும் அலுவலகங்களில் கணினி முன் அமர்ந்து வேலை செய்வது, சந்திக்கின்ற வேலைப்பளு, டெட்லைன்கள் ஆகியவை இளைஞர்களின் வாழ்கையை கடுமையாக மாற செய்துள்ளன.
அதே நேரத்தில், ஐடி ஊழியர்களுக்கான வசதிகளும் நிறுவனங்களை பொறுத்து தற்போது அதிகரிக்கின்றன. கூடியளவு ஊதியம், நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள், வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள், ஹெல்த் இன்சூரன்ஸ், உடற்பயிற்சி கூடங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்றன.

மேலும், பல பணியாளர் பங்குச் சலுகைகள் (ESOPs) மற்றும் தொலைதூர வேலை வாய்ப்பு போன்ற நன்மைகளை வழங்குகின்றன. இந்த சூழலில் பெங்களூரு, தற்போது உலகில் மிகக் குறைந்த செலவில் மென்பொருள் பொறியாளர்களைப் பணியமர்த்தும் நகரமாக உருமாறியுள்ளது.
பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம்..?: WeAreCity என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை UnboxingBLR வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவில் உள்ள மென்பொருள் பொறியாளர்கள் ஆண்டுக்கு சராசரியாக $12,000 (சுமார் ரூ.10 லட்சம்) மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரே நிலை பொறியாளர்கள் $125,000 (ரூ.10 கோடிக்கு மேல்) வரை சம்பளம் பெறுகின்றனர். இதன் மூலம், பெங்களூரு ஐடி பொறியாளர்கள் பத்தில் ஒரு பங்கு சம்பளத்திலேயே வேலை செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
உலகளாவிய அளவில் மென்பொருள் பொறியாளர்களுக்கான சராசரி சம்பளம் $46,000 (ரூ.3.94 கோடி). இது பெங்களூருவுடன் ஒப்பிட்டால் மூன்று மடங்குக்கு மேல் அதிகம். மேலும், ஆசியாவின் முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும் போது கூட வித்தியாசம் அதிகமாக உள்ளது. டோக்கியோ - $62,000 (ரூ.5.31 கோடி), சீயோல் - ரூ.51,000 (ரூ.4.37 கோடி), சிங்கப்பூர் - $47,000 (ரூ.4.02 கோடி) ஆகும். இந்த நகரங்களில் சம்பளங்கள் பெங்களூருவை விட 4 முதல் 5 மடங்கு அதிகமாக உள்ளது.
பொதுவாக ஐடி ஊழியர்கள் என்றால் அதிக நேரம் கணினி முன் வேலை செய்ய வேண்டும், புதிய திட்டங்களை வகுக்க வேண்டும், அதன் மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், தரவு மேலாண்மை, வலைத்தளம், மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிகள் இருக்கும். உலகளவில் திறமை, தொழில்நுட்பம் மற்றும் வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டே சம்பளங்கள் நிர்ணயிக்கப்படுவதை எதிர்பார்க்கும் நிலையில், பெங்களூருவின் திறமையான மென்பொருள் பொறியாளர்கள் தங்களுக்கேற்ப ஊதியம் பெறுகிறார்களா? என்பது இன்று தொழில்துறையில் கேள்விக்குறியாக உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications