பெங்களூரு இந்தியாவில் ஐடி நகரம், பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது மட்டும் அல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த ஐடி மற்றும் டெக் சேவைக்கு உயிர் மூச்சாக உள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் துறையின் பேஸ்மென்ட் பெங்களூர். இப்படி இந்த நகரத்தின் பெருமையை அடுக்கிகொண்டே போகலாம்.
ஆனால் மறுமுனையில் பெங்களூர் டிராபிக் மற்றும் சாலை வசதிகள் குறித்து பெங்களூர் மக்கள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் பேசி வருகிறது. இதே சரிக்கட்ட வேண்டும் என்றே கர்நாடக அரசு சமீபத்தில் BBMP அமைப்பை 5 பிரிவுகளாக உடைத்து GBA என்ற புதிய பெங்களூர் நிர்வாக அமைப்பை உகுவாக்கியது.

இந்த சூழ்நிலையில் பெங்களூரில் பிளாக்பக் என்ற டிரக் சேவைக்கான டிஜிட்டல் தளத்தின் சிஇஓ ராஜேஷ் டிவிட்டரில், ORR சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், சாலையில் இருக்கும் குழிகள் மூலம் 1.5 மணிநேரம் பயணிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார். அடுத்த 5 வருடத்தில் சாலை போக்குவரத்தில் முன்னேற்றம் இருப்பதாக தெரியவில்லை, இதனால் பெங்களூரை விட்டு நானும் எனது நிறுவனமும் வெளியேற முடிவு செய்யவதாக அறிவித்தார்.
இந்த பிரச்சனை கர்நாடக அரசையும், பெங்களூர் நிர்வாக அமைப்பிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. இதேவேளையில் ஆந்திர மாநிலத்தின் அமைச்சரான நர லோகேஷ் பிளாக்பக் சிஇஓ ராஜேஷ் டிவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து ஆந்திரவுக்கு அழைத்தார். நர லோகேஷ்-ன் பதிவு கூடுதல் நெருக்கடியை கொடுத்த நிலையில் பிளாக்பக் சிஇஓ ராஜேஷ் தாங்கள் பெங்களூரை விட்டு வெளியேறவில்லை, ORR பகுதியை விட்டு ஊழியர்களுக்கு ஏதுவான இடத்திற்கு தான் மாறப்போகிறோம் என விளக்கம் கொடுத்தார்.
இதற்கு மத்தியில் மோகன்தாஸ் பாய் முதல் கிரன் மசும்தார் வரையில் பலர் டிவிட்டரில் பெங்களூர் நிர்வாகத்தையும், கர்நாடக அரசையும் விமர்சனம் செய்தனர். பல இடத்தில் மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.
இந்த நிலையில் பெங்களூர் சாலைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா, பெங்களூரின் 5 நிர்வாக அமைப்புகளும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சாலையை சரி செய்யும் பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக பெங்களூர் நிர்வாக அமைப்புகளுக்கு கூடுதலாக சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் செப்டம்பர் 22ஆம் தேதி முதல் பணிகள் பெங்களூர் முழுவதும் துவங்கியுள்ளது.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக, புதன்கிழமையன்று கியர் ஸ்கூல் ரோடு, பாலகெரே, வீரண்ணபாளையா, நாகேனஹள்ளி தின்னே மெயின் ரோடு, சாமராஜ்பேட், வசந்த் நகர், மாத்திகேரே, மைசூரு ரோடு, பேகூர் மற்றும் உத்தரஹள்ளி மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் சாலை சரி பார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் பெங்களூரு நகர மத்திய மாநகராட்சி, சாலைகளை மேம்படுத்துவதற்கு பணிகளை சென்ட் ஜான்ஸ் சர்ச் ரோடு, கேஆர் சர்க்கிள், ரேஸ் கோர்ஸ் ரோடு, சாலுக்கியா சர்க்கிள், மிஷன் ரோடு, மாரிகவுடா ரோடு மற்றும் ஜேசி ரோடு ஆகிய பகுதிகளில் சாலைகள் பணிளை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த ஒரு மாதத்தில், இன்னும் பல சாலைகளை பழுது பார்க்க மாநகராட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதில் முக்கியமாக ஹோசா ரோடு, போர்வெல் ரோடு, கனகபுராவில் உள்ள ஹாலிடே வில்லேஜ் ரோடு, வர்த்தூர்-பனத்தூர் ரோடு, சோமசுந்தர்பாளையா ரோடு, கப்பன் பார்க் சுற்றியுள்ள பகுதிகள், ஹார்லூர்-குட்லு ரோடு, சர்ஜாப்பூர் ரோடு, பாபுசாபாளையா ரோடு மற்றும் அவுட்டர் ரிங் சாலையின் சர்வீஸ் சாலைகள் ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன என டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள், பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது.
மேலும் தற்போது சாலையில் உள்ல பள்ளங்களை நிரப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்றாலும், இவை தற்காலிக தீர்வுகளாக இருப்பதாக மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தப் பணிகள் நீண்ட காலத்திற்கு பயன் அளிக்காமல் போகலாம் என்ற கவலையும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications