சமீப காலமாக ரியல் எஸ்டேட் வளர்ச்சி விண்ணை எட்டியுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் செய்தி வந்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகர்களின் கூற்றுப்படி, பெங்களூரில் அடுக்குமாடி கட்டிடங்களின் வாடகை செலவு 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் வாடகை செலவுகள் கடந்த காலாண்டில் நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் குறிப்பாக இந்திரா நகர் மற்றும் கோரமங்களா போன்ற முக்கிய பகுதிகளில் வாடகைகள் கடந்த மூன்று மாதங்களில் 20% குறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையின் மந்தநிலை காரணமாக அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வாடகை செலவு 15 சதவீதம் வரை குறையுமென்று எதிர்பார்ப்பதாக ஹனு ரெட்டி ரியாலிட்டியின் துணைத் தலைவரான கிரண் குமார் கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் வீட்டு வாடகை செலவு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலை காரணமாக வாடகை செலவு குறைந்துள்ளது. தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, பெங்களூரு முழுவதும் வாடகை செலவு குறைந்ததற்கு ஏராளமான வீட்டு தேர்வுகள் இருப்பதையே காரணமாக கூறுகின்றனர். இதனால் தங்களுக்கு ஏற்ற வீட்டினை, வாடகை வீட்டிற்கு செல்பவர்களால் தேர்வு செய்ய முடிகிறது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதிகமான வீடுகள் கிடைப்பதால் வாடகைதாரர்களுக்கு அதிக தேர்வுகள் இருக்கின்றன. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பெங்களூரில் உள்ள ரியல் எஸ்டேட் துறை ஏலத்திற்கான முக்கிய இடமாக மாறியது. அப்போது வாடகைதாரர்கள் தங்களின் விருப்பமான அடுக்குமாடி குடியிருப்புகளை அதிக விலை கொடுத்து வாங்க போட்டி போட்டனர் என்றும் செய்திகள் வெளியானது.
இதனால் வாடகை வீட்டிற்கான தேவையும் குறைந்துள்ளது. மேலும் அப்போது இருந்த வலுவான தேவை காரணமாக முக்கிய பகுதிகளில் 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வாடகை செலவுகள் உயர்ந்தது. ஆனால் தற்போது வாடகை சந்தையில் அதிகமான வீடுகள் கிடைப்பதால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வாடகை செலவுகள் சரியத் தொடங்கியதாக ரியாலிட்டி கார்ப்பரேஷனின் துணைத் தலைவரான சுனில் சிங் கூறியுள்ளார்.
அனராக் அறிக்கையின் தரவுகளின் படி, செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் பெங்களூரு குடியிருப்பு சந்தை குறிப்பிடத்தக்க விற்பனை வீழ்ச்சியை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் சுமார் 15,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விற்பனை இரண்டாம் காலாண்டு மற்றும் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் சரிவு என்றும் கூறப்படுகிறது.
கிழக்கு பெங்களூரில் 18 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல வடக்கு பெங்களூரிலும் 6 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் மாறாக தெற்கு பெங்களூர் 13 சதவீத விற்பனை அதிகரிப்பை பெற்றுள்ளது.
பெங்களூர் ரியல் எஸ்டேட் துறை சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வீட்டு விலை உயர்வு வட்டி விகிதங்கள், பொருளாதாரம் மந்த நிலை போன்ற காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெங்களூரில் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி, மக்களை ஈர்க்கும் தன்மை ஆகியவை நிலையாக இருப்பதால் இது வெறும் தற்காலிக சரிவாகவே பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications