மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) செயல்படுத்தும் பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டத்தில் முக்கியமான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. பெங்களூரின் புறநகர் பகுதியான ஹோஸ்கோட்டே மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஓசூரை இணைக்கும் புதிய சாலை விரிவாக்கம் பணிகள் 2025 மார்ச் மாதத்திற்குள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) என்பது பெங்களூர் நகருக்கு மத்தியில் இருக்கும் அவுட்டர் ரிங் சாலையை விட பெரிய வட்டமாகும். இது பெங்களூர் கிழக்கு பகுதியில் டப்பாஸ்பெட், டொப்பபல்லபுரா, தேவனஹள்ளி, ஹோஸ்கோட்டே, ஓசூர்-ஐ இணைக்கிறது. இதேபோல் மேற்கு பகுதியில் டப்பாஸ்பெட், மாகடி, ராமநகரா, கனகப்புரா, ஆனேக்கல், ஒசூர் ஆகியவற்றை இணைக்கிறது.

இந்த திட்டம் பெங்களூர் புறநகர பகுதி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கப்போகிறது, பெங்களூர் மையப்பகுதியில் மூச்சை மூட்டும் அளவுக்கு இருக்கும் மக்கள் கூட்டம், வாகன நெரிசலைச் சமாளிக்கவும், பெங்களூர் வளர்ச்சி திட்டங்களுக்கும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் இந்த சாலை திட்டம் மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR) திட்டம் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புடன், இப்புதிய விரிவாக்கம் மூலம் மொத்த நீளத்தை 102.6 கிலோமீட்டருக்கு அதிகரித்து மொத்த சாலை திட்டம் 288 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக உயரப்போகிறது. 2027 ஆம் ஆண்டில் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டப்பாஸ்பெட்-ல் இருந்து தமிழ்நாடு எல்லை வரை தேசிய நெடுஞ்சாலை 648 என்ற அடையாளத்துடன் இந்த வழித்தடம் செயல்படும், பெங்களூருவின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR).
இந்த சாலை சர்வதேச விமான நிலையம் இருக்கும் தேவனஹள்ளி பகுதியை இணைப்பதால், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு வருவோருக்கு இந்த வழித்தடம் மிகவும் முக்கியமானதாக மாறும்.
STRR திட்டத்திற்காக மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பெங்களூரு கிழக்கு பகுதியில் இத்திட்டத்தின் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 12.3 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க உள்ளனர். STRR திட்டத்தில் ஹோஸ்கோட்டே பகுதியில் இருந்து தமிழ்நாடு எல்லை வரையில் சுமாப் 21 கிமீ சாலைக்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த புறநகர் ரிங் ரோடுக்காக கூடுதலாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
STRR திட்டத்தின் கட்டுமானத்தில் மீதமுள்ள ஐந்து பிரிவுகளுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன, இந்த 5 பிரிவு சாலை சுமார் 144.25 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இப்பிரிவு கட்டுமானத்திற்கு மொத்த செலவாக 4,749.74 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த 5 பிரிவுகளின் கட்டுமானம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications