ஓசூர் விமான நிலையத்திற்கு போட்டியாக கர்நாடக அரசு பெங்களூரில் 2வது விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 3 இடங்களையும் சமீபத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆய்வுகளை மேற்கொண்ட நிலையில் 3 இடத்திலும் பெரிய பிரச்சனைகள் இருப்பதாக கண்டறிந்தாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக இரண்டாவது விமான நிலையத்துக்கான இடம் தேர்வு செயல்முறை தொடங்கியுள்ளது. கர்நாடக மாநில தொழில் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (KSIIDC) பெங்களூர்-க்கு அருகில் தேர்வு செய்யப்பட்ட மூன்று இடங்களுக்கு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு செய்ய consultant-ஐ நியமிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.

இந்த consultant நிறுவனம் மூன்று இடங்களையும் strategic-ஆகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆராய்ந்து, புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க எது சிறந்தது என்பதை தீர்மானிக்க வேண்டும். இந்த ஆய்வு விமான நிலைய ஆணையத்தின் (AAI) முதல்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து நடக்கிறது.
கர்நாடக அரசு தேர்வு செய்யப்பட்ட மூன்று இடங்களில் கனகபுரா ரோடு அருகே சுடஹள்ளி மற்றும் சோமனஹள்ளி என்ற இரு பகுதிகளை இணைக்கும் பகுதிகளில் உள்ளன. மூன்றாவது இடம் நெலமங்கலா அருகே துமகூரு ரோடு பகுதியில் உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் சுமார் 4,500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் பெங்களூருவின் வெளிப்புறத்தில் உள்ளதால், நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும். இந்த திட்டம் பெங்களூருவின் விமான பயணிகள் எண்ணிக்கை வேகமாக உயர்வதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக அரசுக்குள் இந்த இடம் தேர்வில் வேறுபட்ட கருத்தும் உள்ளது. துணை முதல்வரும் பெங்களூரு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் கனகபுரா ரோடு பகுதிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா துமகூரு ரோடு இடம் தான் சரியான தேர்வு என தெரிவித்துள்ளார். இந்த வேறுபாடு இருந்தாலும், ஆய்வு அறிக்கை அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் AAI அறிக்கையை வெளியான போதே கர்நாடகாவின் ஹெவி மற்றும் மீடியம் தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி. பாட்டில், ஒவ்வொரு இடத்தின் நன்மை தீமைகளை பரிசீலிக்கும் பகுதி தான் இது, இதன் மூலம் இத்திட்டத்திற்கு எவ்விதமான பாதிப்பும இல்லை என்று விளக்கினார். இதோடு விரைவில் techno-economic மற்றும் financial feasibility ஆய்வு தொடங்கும் என்று உறுதி அளித்தார். இதன் படி தற்போது தற்போது இதற்காக விருப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
பெங்களூரு இரண்டாவது விமான நிலைய திட்டம் வேகமெடுக்க முக்கிய காரணம், தமிழ்நாடு அரசு ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலைய திட்டமும் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஓசூர் விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது. இது கர்நாடக எல்லைக்கு அருகில் உள்ளதால், பெங்களூரு பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது. இதனால் கர்நாடக அரசு தனது இரண்டாவது விமான நிலையத்தை விரைவுபடுத்தி வருகிறது.
பெங்களூரு இரண்டாவது விமான நிலைய திட்டம் நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானது. மூன்று இடங்களுக்கு ஆய்வு நடத்தி சிறந்த இடத்தை தேர்வு செய்வது மூலம் நகரின் போக்குவரத்து, தொழில் வளர்ச்சிக்கு உதவும்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications