கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெங்களூர் - ஓசூர் பெல்ட்டில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஒப்பந்தம் மூலம் 2 மாநிலங்களும் 2வது விமான நிலையத்தை 2033 வரையில் அமைக்க முடியாது என்றாலும் 2வது விமான நிலையம் அமையும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் சமீபத்தில் பெங்களூரின் இரண்டாவது விமான நிலையத்தின் இடத்தை தீர்மானிக்க ஒரு கூட்டத்தைக் கூட்ட திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்த முடிவு மிகவும் முக்கியமானது என்பதால் ஆளும் கட்சியைத் தாண்டி, எதிர்க்கட்சிகளும், மக்களும், சந்தை நிபுணர்களும், தொழிற்துறையினரும் பல பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் பெங்களூரின் 2வது விமான நிலையம் அமைக்கும் பணிகள் இரண்டு முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும்.
2 முக்கிய காரணி: இவை பயணிகள் எண்ணிக்கை மற்றும் தற்போதுள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு (KIA) இணைப்பு ஆகிய இரண்டு விஷயங்களை மையமாக வைத்து முடிவு செய்யப்படும். இந்த அடிப்படையில் தற்போது கர்நாடக அரசு 4 இடங்களை முதல்கட்டமாகச் சேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் காலம் தேவை: பெங்களூர் 2வது விமான நிலையத்தை அமைப்பதில் நிலம் கையகப்படுத்துவதற்குத் தேவையான கால அவகாசம் மற்றும் நில உரிமையாளர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் திட்டச் செயல்முறையை முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
முக்கிய பிரச்சனை: அமைச்சர் எம்.பி.பாட்டீல், ஓசூரில் விமான நிலையம் கட்டுவதற்கான தமிழக அரசின் முடிவைப் பற்றிப் பேசுகையில், BIAL உடனான பிரத்தியேக விதி இதற்குப் பொருந்துமா என்பதை ஆராய வேண்டும் என்று கூறினார். இவரது கருத்தின் மையப்பொருள் பெங்களூர் சர்வதேச விமான நிலைய லிமிடெட்-க்கு (BIAL) 2032 வரையில் 150 கிலோமீட்டர் சுற்றளவில் மற்றொரு விமான நிலையத்தை நிறுவக் கூடாது என மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் இந்த விதி 2033ல் முடிவடையும் காரணத்தால் தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பெங்களூர் - ஓசூர் பெல்ட்டில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பெங்களூரு 2வது விமான நிலையத்திற்கான சாத்தியமான இடங்கள்: தற்போது நடந்துள்ள கூட்டத்தில், ஏற்கனவே குறிப்பிட்ட 2 முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் புதிய விமான நிலையத்திற்கான சாத்தியமான 4 இடங்களை அமைச்சர் எம்.பி பாட்டீல் குறிப்பிட்டார்.

பெங்களூர் 2வது விமான நிலையம் பயணிகள் எண்ணிக்கைக்கு முன்னுரிமை என்றால் சர்ஜாபூர் மற்றும் கனகபுரா சாலை போன்ற பகுதிகள் வலுவான போட்டியாளர்கள். இருப்பினும், KIA உடனான இணைப்பு முன்னுரிமை பெற்றால், தும்கூர் மற்றும் டபாஸ்பேட் (Tumakuru மற்றும் Dabaspet) போன்ற இடங்கள் முன்னணியில் இருக்கும் என தெரிவித்தார்.
ஓசூர்-க்கு பிரச்சனை: கர்நாடக அரசு பெங்களூர் 2வது விமான நிலையத்தை சர்ஜாபூர் மற்றும் கனகபுரா சாலை போன்ற பகுதிகளில் அமைக்க முடிவு செய்தால் தமிழ்நாடு அரசின் ஓசூர் விமான நிலையத்திற்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடும். காரணம் தற்போது இருக்கும் ஓசூர் TAAL விமான நிலையத்திற்கும் சர்ஜாபூர் மற்றும் கனகபுரா சாலை பகுதிகளுக்கும் வெறும் 25- 50 கிமீ தொலைவு மட்டுமே உள்ளது.
சர்ஜாபூர் மற்றும் கனகபுரா சாலை போன்ற பகுதியில் கர்நாடக அரசு பெங்களூர் 2வது விமான நிலையத்தை அமைத்தால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் வீணாகி விடும்.
ஆனால் இதுவரையில் கர்நாடக அரசு எந்த பகுதியில் 2வது விமான நிலையத்தை அமைக்கப்போகிறது என்பதை முடிவு செய்யவில்லை.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications