குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் மற்றும் கல்வி சார்ந்த செலவுகள் நாம் எதிர்பார்க்காத வேகத்தில் உயர்ந்து வருகின்றன. ஃப்ரீ கேஜி தொடங்கி பிள்ளைகளை 12ஆம் வகுப்பு வரை படிக்க வைப்பதற்கே நாம் தனியாக சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு கல்வி கட்டணங்கள் பெரிய அளவில் உயர்ந்துள்ளன.
கல்வி கட்டணம்: குறிப்பாக பெருநகரங்களில் வசிக்கும் பெற்றோர்களின் நிலைமை மிக மோசம். பெங்களூருவில் ஒரு பள்ளியின் கல்வி கட்டண விவரங்களை நிதி திட்டமிடல் நிபுணரான டி முத்துகிருஷ்ணன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது உண்மையை போட்டுடைக்கும் வகையில் அமைந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஒரு பள்ளியில் குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் தொடர்பான விவரங்களை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார் .

எக்ஸ் பதிவு: இந்தியா என்பது ஒரு சுதந்திரமான சந்தை, இங்கே ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு விலை உண்டு, அதனை வாங்கிக் கொள்பவர்கள் தான் அவர்களின் வசதிக்கேற்ப தீர்மானித்துக் கொள்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கும் அவர் பெங்களூருவில் இருக்கும் ஒரு பள்ளியில் கல்வி கட்டணத்தை பாருங்கள் என பதிவு செய்திருக்கிறார்.
பள்ளி கட்டணம்: ஐடி துறையில் வேலை செய்யும் தம்பதி ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டினால் கூட பள்ளிக்கு செல்லக்கூடிய இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு இவ்வளவு கல்விச்சலவை ஏற்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அவருடைய அந்த பதிவில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பள்ளி கட்டண விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன.
அட்மிஷன் கட்டணம் ரூ.1லட்சம்: அதில் விண்ணப்ப கட்டணமே ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டிருக்கிறது, இது தவிர அட்மிஷன் ஃபீஸ் என 1 லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இது ஒரு முறை செலுத்தக்கூடிய தொகை மேலும் திரும்ப வழங்க முடியாத ஒரு தொகை என அதில் குறிப்பிட்டுள்ளனர். இது தவிர 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணம் 7 ,35 ,000 ரூபாய் , அடுத்ததாக 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணம் 7,75,000 ரூபாய். 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலக் கூடிய மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணம் 8 ,50,000 ரூபாய் . ஐசிஎஸ்ஈ பிரிவில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆண்டு கல்வி கட்டணமாக 5,94,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

ரூ.11 லட்சம் கல்வி கட்டணம்: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணம் 11 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கின்றனர். இதனை குறிப்பிட்டு இருக்கும் முத்துகிருஷ்ணன் ஒரு ஐடி நிறுவனத்தில் கணவன் மனைவி வேலை செய்கிறார்கள் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டால் கூட இவ்வளவு கல்வி கட்டணத்தை அவர்களால் கூட ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறார் .
ஏன் இவ்வளவு கட்டணம்?: அவருடைய இந்த பதிவுக்கு பலரது பலரும் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஒரு பயனர் மக்கள்தான் இப்படிப்பட்ட கல்வி கட்டண உயர்வுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார். தனியார் பள்ளிகளில் படித்தால்தான் என்னுடைய பிள்ளை ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு செல்வான் என நினைத்து அங்கே பிள்ளைகளை சேர்ப்பதற்கு துடிக்கிறார்கள் இந்த டிமாண்ட் தான் அவர்களை கட்டணத்தை உயர்த்த செய்திருக்கிறது என கூறியிருக்கிறார் .
அரசு நடவடிக்கைக்கு கோரிக்கை: ஒரு பயனர் இவ்வளவு கல்வி கட்டணம் வசூல் செய்தால் கூட அதனை அந்த மேனேஜ்மென்ட் தான் எடுத்துக் கொள்கிறது தவிர அங்கே வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பகிர்வது கிடையாது என தெரிவித்திருக்கிறார். ஒரு பயனர் அனைத்து பெற்றோரும் இணைந்து தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க மாட்டேன் என ஒரு முடிவினை எடுத்தால் தான் தனியார் பள்ளிகளின் இந்த கட்டண அட்டூழியம் குறையும் எனக் கூறியிருக்கிறார். தனியார் பள்ளிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என ஒரு பயனர் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications