பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது, சில நாட்கள் முன்பு பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் 5 மணிநேரத்தில் 40 ரூபாய் சம்பாதித்ததாக கண்ணீர் விட்ட வீடியோவுக்கு பெரும்பாலானோர் வருந்தும் அதேவேளையில் ஆட்டோ ஓட்டுனர் செய்யும் அநியாயத்தை பட்டியலிட்டனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சமுக வலைத்தளத்தில் பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் செய்யும் சேட்டைகளை மக்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதில் முக்கியமாக மும்பையை சேர்ந்த ஒரு டெக் ஊழியர் பெங்களூர் வந்த நிலையில் அவர் எதிர்கொண்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மும்பையில் Razorpay நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுபவர் பிரசாந்த், மும்பையில் இருந்து ரயிலில் பெங்களூர் சிட்டி ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். பெங்களூர் வந்த உடன் ஓலா ஆட்டோ புக் செய்த பிரசாந்த், ஆட்டோகாரர் அவருக்கு கால் செய்து அருகில் வர கூறியுள்ளார், ஆட்டோ-வுக்கு அருகில் சென்ற பிரசாந்த்-க்கு நடந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்எளது.
பொதுவாக ஓலா, உபர் தளத்தில் ஆட்டோ புக் செய்தால் பயணி ஓட்டுனர்-க்கு கால் செய்து எங்கு செல்ல வேண்டும் என்பதை கூறுவதும், விரைவாக pick up point-க்கு வர கூறுவதும் வழக்கம். ஆனால் இங்கு மாறாக ஆட்டோ ஓட்டுனர் பயணி அதாவது பிரசாந்த்-க்கு கால் செய்துள்ளார்.
கால் செய்தது மட்டும் அல்லாமல் அவர் இருக்கும் இடத்தில் இருந்து ஆட்டோ இருக்கும் இடத்திற்கு வர அழைத்துவிட்டு, டரிப்-ஐ கேன்சல் செய்துள்ளார். இதோடு ஓலா ஆப்-ல் காட்டும் தொகையை விட 100 ரூபாய் கூடுதலாக கொடுத்தால் போலாம், இல்லாட்டி வர முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை டிவிட்டர் எனப்படும் X தளத்தில் பதிவிட்ட பிரசாந்த் இந்த பெங்களூரில் மிடில் கிளாஸ் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், எல்லோரும் பணக்கார டெக் ஊழியர்களாக இருப்பார்கள் என நினைத்துக்கொள்கிறார்கள். பிரசாந்த் இந்த ஆட்டோவை விட்டுவிட்டு அடுத்த 2 ஆட்டோ-க்களை புக் செய்துள்ளார், அவர்களும் இதேபோன்று செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications