உலகமயமாக்கலில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகில், மனிதனை சற்று நிற்க வைத்து திரும்பிப் பார்க்க வைக்கும் விஷியங்கள் குறிப்பிட்டவைதான். அதாவது, உலகில் எந்திர தனமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதனின் காலத்தை சிக்கனப்படுத்த பல எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் அடிக்கடி அவசரமாகவும் அலட்சியமாகவும் உணரும் உலகில், சிறிய கருணை செயல்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், பெங்களூரை சேர்ந்த பேச்சு குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி டாக்ஸி டிரைவரின் சேவை பாராட்டை பெற்றுள்ளது.
பெங்களூரை சேர்ந்தவர் ராகேஷ். இவர் ஒரு டாக்ஸி ஓட்டுநராக உள்ளார். பேச்சு குறைபாடு உள்ளவரான ராகேஷ், பெங்களூரு விமான நிலைய ரூட்டில் டாக்ஸி சவாரி செய்துவருகிறார். இந்தநிலையில், சிவசுப்ரமணியம் ஜெயராமன் என்பவர், இவரது டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அப்போதைய பயணம் குறித்து சிவசுப்ரமணியம் ஜெயராமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.

அதாவது, டாக்ஸி டிரைவரான ராகேஷ், தனது காரில் பயணிப்பவர்களுக்கு தண்ணீர், நாப்கின்கள் மற்றும் புத்தகங்கள் போன்றவைகள் தள்ளுபடி விலையில் வழங்கி வருகிறார். வழக்கமான வண்டிச் சேவைகள் விமான நிலையப் பயணங்களுக்கான விலைகளை அடிக்கடி உயர்த்தும் அதே வேளையில், ராகேஷ் தனது பயணிகளிடம் குறைவான கட்டணத்தை வசூலித்து வருகிறார்.
பெங்களூரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்ல வெறும் 950 ரூபாய் மட்டுமே வாங்குகிறார். இது Uber மற்றும் Ola சேவைகளில் கூட இந்த சலுகைகள் இல்லை. இவரது யோசனை, என்னுடைய விமான நிலை பயணத்தில் கூட இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது 17,000க்கும் மேற்பட்ட பார்வைகளை கவர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த பதிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு நெட்டிசன்கள் கூறியதாவது, ராகேஷின் கருணை மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ராகேஷ் உண்மையிலேயே நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம். இதைப் பகிர்ந்ததற்கு நன்றி, மற்றொருவர், "கார்ப்பரேட் நிறுவனங்கள் பண மதிப்பை மட்டுமே தேடுகின்றன. கருணை, அக்கறை மற்றும் மனிதாபிமானம் போன்ற பிற மதிப்புகள் அவர்களின் இலவச சலுகையில் இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
இதேபோல் மேலும் ஒரு பயனர்,"அடுத்த முறை நான் பெங்களூரு செல்லும்போது நிச்சயமாக அவரைத் தொடர்புகொண்டு அவரது சேவையைப் பயன்படுத்த முயற்சிப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications