இந்தியாவின் ஐடி தலைநகரமாகவும், ஸ்டார்ட் தலைநகரமாகவும் திகழ்கிறது பெங்களூரு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்கள் பெங்களூருவில் அமைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்புக்காக பெங்களூருவை நோக்கி வருகை தருகின்றனர்.
ஐடி நிறுவனங்கள், ஜிசிசி மையங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் கொண்ட ஒரு நகரமாக பெங்களூரு தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்கின்றனர். டிமாண்ட் காரணமாக பெங்களூருவில் ரியல் எஸ்டேட் மதிப்பும் வேகமாக் உயர்கிறது.

இந்தியாவிலேயே அதிகளவு ரியல் எஸ்டேட் மதிப்பு வளர்ச்சி அடையக்கூடிய ஒரு நகரம் என்ற பெருமை கொண்டது பெங்களூரு. அதற்கேற்ப இங்கே வீட்டு வாடகைகளின் மதிப்பும் அதிகம். ஐடி துறை தான் பெங்களூருவின் இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் என கூறலாம். பெங்களூரில் அண்மைக்காலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ரியல் எஸ்டேட் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கிறது.
அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பெங்களூருவில் வீடுகளின் விலை 63 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக ஒரு பகுதியில் மட்டும் இந்த வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறதாம். எனவே பெங்களூருவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என எண்ணும் நபர்கள் இந்த ஏரியாவில் முதலீடு செய்தால் வரும் நாட்களில் சிறந்த லாபத்தை பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது.
பெங்களூருவில் 2022 ஆம் ஆண்டு ஆண்டில் இருந்து தற்போது வரை வீடுகளின் விலைகள் 63 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்கிறது டாக்கிங் லேண்ட்ஸ் என்ற நிறுவனம். ஏராளமான ஐடி ஊழியர்கள் பெங்களூருவிலேயே செட்டிலாக விரும்பி அங்கேயே தங்களுக்கான குடும்ப வாழ்க்கையும் அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் அங்கேயே சொந்த வீடு வாங்குவதற்கும் விரும்புகின்றனர். இதனால் 2022-2025 வரையிலான காலகட்டத்தில் பெங்களூரில் புதிதாக 2.49 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு அதில் 2.41 லட்சம் வீடுகள் விற்பனையாகி இருக்கின்றன.
குறிப்பாக சர்ஜாபூர் -அத்திபள்ளி வரையிலான வழித்தட பகுதியில் மட்டும் இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு சதுர அடியின் விலை 71% உயர்ந்திருக்கிறதாம். சந்தை விலையை விட அரசின் வழிகாட்டுதல் மதிப்பீடே இவ்வளவு உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு சர்ஜாபூரிலிருந்து அத்திப்பள்ளி வரையிலான வழித்தடத்தில் எஸ்ஆர்ஓ வழிகாட்டு மதிப்பீடு ஒரு சதுர அடிக்கு 4568 ரூபாயாக இருந்தது அதுவே தற்போது ஒரு சதுர அடிக்கு 7800 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் பெங்களூருவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு பகுதியாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications