80% ஊழியர்களை பணிநீக்கம்.. பெங்களூரு ஸ்டார்ட்அப் கொடுத்த ஷாக்..!

பெங்களூரு: கூகுள், டெஸ்லா, மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அவ்வப்போது நாம் செய்திகளில் கேள்விபடுகிறோம். ஆனால் தற்போது ஸ்டார்ட்அப் பெரிய எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பெங்களூருவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 80% ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ரேஷாமண்டி (ReshaMandi) என்ற நிறுவனம் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

80% ஊழியர்களை பணிநீக்கம்.. பெங்களூரு ஸ்டார்ட்அப் கொடுத்த ஷாக்..!

இது ஒரு B2B மார்க்கெட் பிளேஸ் தளமாக செயல்பட்டு வருகிறது. அதாவது இந்த தளத்தை பயன்படுத்தி மக்கள் ஆடைகள் மற்றும் நூல்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கலாம் வியாபாரிகள் அவர்களது பொருட்களை விற்பனை செய்யலாம். நூல், துணிமணி உள்ளிட்டவை இதில் விற்பனை செய்யப்படுகின்றன.

இரண்டாம் கட்ட நிதி திரட்டலில் இந்த ஈடுபட்டு வந்ததாகவும், எதிர்பார்த்த அளவு நிதி திரட்ட முடியாத சூழலில் 80 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரியவந்துள்ளத. கடந்த ஆண்டு முதலே இந்த நிறுவனம் படிப்படியாக தங்களுடைய செயல்பாட்டை குறைத்து கொண்டே வந்து ஊழியர்களையும் பணி நீக்கம் செய்திருப்பது வெளிவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நிறுவனத்தில் 500 பேர் பணியாற்றி வந்தனர், ஆண்டின் இறுதியில் இது வெறும் 100 என குறைந்துவிட்டது. இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சுமார் 300 பேர் இதுவரை தங்களுக்கான இறுதிக் கொடுப்பனவுகள் மற்றும் ஊதியத்தை கூட பெறவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Inc42 வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ரேஷாமண்டி நிறுவனம் தங்களது நிறுவனத்திற்கு எதிர்பார்த்து நிதி கிடைக்காததன் காரணமாகவே இப்படி ஒரு கடினமான முடிவை எடுத்திருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ரேஷாமண்டி தொடங்கப்பட்ட போது Creation Investments, Omnivore, Venture Catalysts ஆகியவை இதில் பெருமளவு முதலீடு செய்தன. ஆனால் இந்த நிறுவனம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சியை அடைய முடியவில்லை. மேலும் பல்வேறு நிதி சிக்கல்களுக்கும் ஆளானது.

இந்நிறுவனம் சுமார் 300 கோடி கடன் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.இதன் காரணமாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து படிப்படியாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தது. அந்த சமயத்தில் ஊழியர்களிடம் மூன்று மாதங்கள் ஊதியமின்றி வேலை செய்யுங்கள் அல்லது உடனடியாக வேலையில் இருந்து வெளியேறி விடுங்கள் என நிறுவனத்தின் தலைமை இவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊழியர்கள் பணிநீக்கம் என்பது பெரிய நிறுவனங்களில் தான் தொடர்கதையாக இருக்கிறது என பார்த்தால் ,ஸ்டார்ட் அப்கள் கூட இப்படி பணி நீக்கம் செய்வது வேலை தேடுபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சர்வதேச அளவில் 330 நிறுவனங்கள் சுமார் 98,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+