உலகளவில் போட்டித்திறனை தக்கவைத்துக் கொள்ள இந்திய இளைஞர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி முதல் பலர் பேசிய நிலையில் தற்போது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் பேசி சமுக வலைத்தளத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டு உள்ளார்.
இளைஞர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவும் இதேவேளையில், மறுபுறம் வொர்க் லைப் பேலென்ஸ் குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் சாகர் லெலே என்பவர் பதிவிட்ட ஒரு பதிவினால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

அந்த பதிவில், பெங்களூருவில் உள்ள ஒரு கோ வொர்க்கிங் ஸ்பேஸ்-ல் மாலை 6:30 மணியளவில் இருக்கும் நிலைமையைப் புகைப்படம் எடுத்துப் பதிவிட்டார். அந்த புகைப்படத்தில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
புகைப்படத்தைப் பதிவிட்ட லெலேயின் தனது பதிவில், "நான் முதலில் அலுவலகத்திற்கு வந்து கடைசியாகக் கிளம்புபவராக இருப்பேன், காலை 7 மணிக்கு அலுவலகத்திற்கு வந்து அதிகாலை 2 மணிக்குத்தான் கிளம்ப வேண்டியிருக்கும்" என்று வேலை செய்யும் ஊழியர்களை விமர்சித்து Shame என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார்.
ருபீட்டிங் (rupeeting) நிறுவனத்தின் நிறுவனர் தான் இந்த சாகர் லெலே, இவர் புகைப்படத்தைப் பதிவிட்டு "பெங்களூருவில் உள்ள கோ வொர்க்கிங் ஸ்பேஸ்-ல் மாலை 6.30 மணி காட்சி இது. வெட்கக்கேடு" என்று எழுதியது ஒட்டுமொத்த டிவிட்டர்வாசிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு இணையத்தில் பகிரப்பட்டதில் இருந்து, 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். ருபீட்டிங் (rupeeting) நிறுவனத்தின் நிறுவனர் சாகர் லெலே பதிவுக்கு பதில் அளித்த ஒரு பயனர், "மக்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வீட்டிலிருந்து வேலை செய்யவும் முன்னதாகவே கிளம்புகிறார்கள்" என்று வேலை முடித்து சீக்கிரம் செல்வதை ஆதரித்துள்ளார்.
8 மணிநேரத்திற்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, பிறகு ஏன் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும்? என மற்றொருவர் டிவீட் செய்துள்ளார்.
வேலை செய்வதை மிகைப்படுத்திக் காட்டுவதை விமர்சித்து, ஒரு பயனர் "உங்கள் எதிர்பார்ப்பு என்ன? தங்கப்பதக்கமா? இல்லை! இப்போது உள்ள மக்கள் புத்திசாலிகள். அதிக நேரம் வேலை செய்வது அதிக லாபம் தரும் என்று அர்த்தமில்லை. எட்டு மணி நேரம் கவனம் செலுத்தி வேலை செய்வது மிகவும் பயனுள்ளது. மீதமுள்ள நேரம் குடும்பத்திற்கும் உங்களுக்காகவும்." என்று எழுதியுள்ளார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications