இந்திய பொருளாதாரத்தின் தூணாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில் மாநில வாரியாக அதிக வர்த்தகத்தை பெறுவதில் தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள் (STPs) மென்பொருள் ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த நிலையில் 2023-24 நிதியாண்டில், இந்தியாவில் எந்த நகரம் அதிகப்படியாக மென்பொருளை ஏற்றுமதி செய்துள்ளது என்ற தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. பலரும் எதிர்பார்க்கப்படுவது போல் "இந்தியாவின் சிலிகான் வேலி" என்று அழைக்கப்படும் பெங்களூரு இப்பட்டியலை முதலிடத்தில் பிடித்தது.

பெங்களூர் நகரில் இருந்து மொத்த மென்பொருள் ஏற்றுமதி மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. பெங்களூரை தொடர்ந்து ஹைதராபாத், புனே, சென்னை மற்றும் மும்பை ஆகியவை 70,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளது.
குருகிராம், நொய்டா, கொல்கத்தா, காந்திநகர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களும் மென்பொருள் ஏற்றுமதியில் டாப் 10 பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என MeITY தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் IT துறையில் 2வது மற்றும் 3வது நிலை நகரங்களின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைக் இந்த டாப் 10 பட்டியல் காட்டுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்கில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மென்பொருள் மதிப்பின் அடிப்படையில் டாப் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்களின் பட்டியல்
பெங்களூரு: 4,07,088.72 கோடி ரூபாய்
ஹைதராபாத்: 1,21,115.57 கோடி ரூபாய்
புனே: 1,05,818.98 கோடி ரூபாய்
சென்னை: 77,421.44 கோடி ரூபாய்
மும்பை: 76,564.55 கோடி ரூபாய்
குருகிராம்: 52,931.70 கோடி ரூபாய்
நொய்டா: 50,119.10 கோடி ரூபாய்
கொல்கத்தா: 13,029.69 கோடி ரூபாய்
காந்திநகர்: 8,636.92 கோடி ரூபாய்
திருவனந்தபுரம்: 5,315.81 கோடி ரூபாய்
இந்த புள்ளிவிவரங்கள் இந்தியாவின் IT துறையின் திறனையும், உலகளவில் போட்டியிடும் திறனையும் வெளிப்படுத்துகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் திறமையான தொழிலாளர் பட்டாளம் காரணமாக இந்தியாவின் ஐடி சேவை துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது.


Click it and Unblock the Notifications