பெங்களூர்: ஐடி ஹப் என்ற உடனே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பெங்களூரு தான். பெங்களூருவில் இல்லாத ஐடி நிறுவனங்களே கிடையாது. அதேபோல ஸ்டார்ட் அப் தலைநகராகவும் பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மற்றொரு நகரமும் ஐடி ஹப் ஆக மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்ணீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அண்மைக்காலமாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் பெங்களூருவை தவிர்த்து கர்நாடகாவின் வேறு நகரங்களில் தங்களுடைய அலுவலகங்களை நிறுவத் தொடங்கியுள்ளன.

இதில் அனைவருக்கு விருப்பமான சாய்ஸாக இருப்பது கடற்கரை நகரமான மங்களூரு. கர்நாடக மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் மங்களூருவும் ஒன்று. இங்கே இன்போசிஸ், காக்னிசன்ட் மற்றும் இன்வெஞ்சர் டெக்னாலஜி போன்ற பிரதான நிறுவனங்கள் ஏற்கனவே தங்களுடைய அலுவலகங்களை நிறுவி விட்டன.
அண்மையில் கூட டெக் மகேந்திரா நிறுவனம் மங்களூரில் தனது சேட்டிலைட் அலுவலகத்தை திறந்திருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பெரிய நிறுவனங்களின் கவனமானது மங்களூரு பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இங்கே நான்கு முதல் ஐந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் வளர்ந்து வரக்கூடிய தகவல் தொழில்நுட்ப மையமாக மங்களூரு மாறி வருகிறது என 99 கேம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரோகித் பாத் தெரிவித்துள்ளார். மங்களூரு நோக்கி முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் ஏனெனில் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான தகவல் தொழில்நுட்ப நகரமாக மங்களூரு மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
மங்களூர் பகுதியில் நிறுவனங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு ஏற்ற வகையில் வரிச்சலுகை மற்றும் சாதகமான தொழில் கொள்கைகளை அரசு கொண்டுவர வேண்டுமென நோவிகோ சொல்யூஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான முகமது அனீஸ் கூறியுள்ளார்.
மங்களூர் பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், சைபர் செக்யூரிட்டி ஆகிய துறை சார்ந்த படிப்புகளை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறைகளில் சிறந்த பணியாளர்கள் கிடைக்க கூடிய ஒரு நகரமாக மங்களூரு இருக்கும் என கூறப்படுகிறது.
கடற்கரையோரம் உள்ள நகரம், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவது, திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆகியவை காரணமாக இந்தியாவின் முக்கியமான ஐடி ஹப்பாக மங்களூரு மிக விரைவில் மாற இருக்கிறது என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications