பெங்களூர்: பெங்களூரு நகரத்தில் புறநகர் ரயில் சேவை திட்டம் 2027 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் புறநகர் ரயில் சேவை திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதில் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டு பாதைகளில் பகுதி அளவு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்கள் பத்து நிமிட இடைவெளிகளில் இயங்கும் என்றும் எதிர்காலத்தில் இது ஐந்து நிமிட இடைவெளிகளில் இயக்க வழிவகை செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக சிக்கன் பனாகரா - யஷ்வந்த்பூர் இடையிலான எட்டு கிலோமீட்டர் கொண்ட இரண்டாவது காரிடார் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமாம். அதன் பிறகு நான்கு மாதங்கள் முடிந்து ஹீலாலிகே முதல் பெண்ணின்கலா வரையிலான 17 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நான்காவது காரிடார் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்தில் நான்கு காரிடார்களும் மொத்தம் 148 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இவை அனைத்துமே 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது 2029 ஜூன் மாதத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு புறநகர் ரயில் சேவை திட்டத்திற்காக 306 ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்வதற்கு கடந்த மாதம் தான் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக அதிகாரபூர்வமான அரசாணை வெளிவந்தவுடன் ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு புறநகர் ரயில் திட்டமானது 50 சதவீதம் கர்நாடக அரசு பங்களிப்பு 50 சதவிகிதம் மத்திய ரயில்வே பங்களிப்பு என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . எனவே தற்போது மத்திய ரயில்வே துறை பெட்டிகள் கொள்முதலுக்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் விரைவாக அந்த பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். முதல் கட்டமாக மூன்று ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் பின்னர் அது ஆறு பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது பல்வேறு இடங்களில் ரயில் பாதைகளை அமைப்பதற்கான பணிகளும், சிக்னல்கள் மற்றும் பிற உள் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காலை 4.30 மணி முதல் இரவு 11:30 மணி வரை ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ரயில் பெட்டியும் 80 இருக்கைகள் கொண்டிருக்கும் 300 பயணிகள் பயணிக்கும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications