பெங்களூர் டிவிட்டர் வாசிகள் மத்தியில் இந்தக் காலேஜ் டிராப்அவுட்-ன் டீ கடை தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.
பொதுவாகப் பெரு நகரங்களில் மக்கள் செய்யும் சேட்டைகளுக்குப் பஞ்சம் இருக்காது, பெங்களூர் போன்ற டெக் ஊழியர்களும், டெக் குறித்து அதிகப்படியான விழிப்புணர்வு கொண்ட மக்கள் மத்தியில் சேட்டைகளுக்கு என்ன குறைவு இருக்கப் போகிறது.
இந்தச் சேட்டையின் உச்சம் தான் இந்தக் காலேஜ் டிராப்அவுட்-ன் டீ கடை.
டீ கடை
கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு Frustrated Dropout என்ற நிறுவனத்தின் பெயரில் டீ கடை திறந்துள்ள சுபம் சைனி, தனது கடையில் பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்பதாக அறிவித்து விளம்பரப் பலகை வைத்துள்ளார். இது பெங்களூர் டெக் மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்தது.
சுபம் சைனி
சுபம் சைனி கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது கிரிப்டோ-வில் அதிகளவில் முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பார்த்து வந்துள்ளார். ஆனால் ஏப்ரல் 2021க்கு பின்பு இந்த நிலை மொத்தமாக மாறியது மட்டும் அல்லாமல் கிரிப்டோ சந்தை மொத்தமாகச் சரிய துவங்கியது.
நிதி நிலை
இதனால் சுபம் சைனி-யின் நிதி நிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் வெறுப்படைந்த சுபம் சைனி சாலையோரத்தில் கிரிப்டோ பேமெண்ட்-ஐ ஏற்கும் வகையில் டீ கடையைத் திறந்துள்ளார். இதேபோல் சுபம் சைனி தனது கடையில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துள்ளார்.
20 பேர்
கிரிப்டோ-வை பேமெண்ட் ஆக ஏற்கத் துவங்கிய பின்பு டீ விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறும் சுபம் சைனி, வாரத்தில் குறைந்தது 20 பேராவது கிரிப்டோகரன்சியைக் கொண்டு பேமெண்ட் செலுத்துவதாகக் கூறுகிறார் சுபம் சைனி.
Paxful crypto பேமெண்ட்
சுபம் சைனி பிட்காயினைப் பேமெண்ட் ஆகப் பெற Paxful crypto தளத்தைப் பயன்படுத்துவதாகவும், டீ-யின் விலைக்கு இணையான டாலர் விலையைப் பலகையில் எழுதி வைப்பதால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும் பிட்காயின் மூலம் பேமெண்ட் செலுத்த விரும்புவோர் இதை விலையைப் பார்த்துப் பேமெண்ட் செலுத்துகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications