பெங்களூரு நிறுவனத்தில் அடுத்த ஷாக்.. இதுதான் பணிநீக்கம் நடப்பதற்கான சிக்னலா..?

பெங்களூரு: சர்வதேச நிறுவனங்கள் மட்டுமல்ல இந்தியாவிலும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை தீவிரபடுத்தி இருப்பது தெரிய வருகிறது.

ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவில் தன்னுடைய நிறுவனம் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது நாள் வரை தங்களுக்கு வழங்கி வந்த கார் சேவையை நிறுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த அந்த ஊழியர் கிராபிக் டிசைனராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

பெங்களூரு நிறுவனத்தில் அடுத்த ஷாக்.. இதுதான் பணிநீக்கம் நடப்பதற்கான சிக்னலா..?

இவர்களின் நிறுவனத்தில் பணி நேரம் இரவு நேரம் வரை நீண்டால் அவர்களுக்கு நிறுவனம் சார்பாகவே கார் சேவை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் திடீரென சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக இனி எந்த ஊழியருக்கும் கார் சேவையை வழங்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்களாம்.

இதனை பதிவிட்டுள்ள அந்த ஊழியர் தற்போது இந்த நிறுவனம் இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டிற்கு செல்ல வேண்டியது உங்கள் பிரச்சினை என அறிவித்திருப்பதாக கவலை தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஒரு சிலர் இரவு நேரத்தில் நீண்ட நேரம் வேலையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்கள் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடு செய்ய வேண்டியது நிறுவனத்தின் கடமை அதை அவர்கள் தவறுகிறார்கள் என பதிவு செய்கின்றனர்.

குறிப்பாக நீங்கள் பெண்களாக இருந்தால் அந்த நிறுவனம் கண்டிப்பாக உங்களுக்கு கார் வசதி செய்து தர வேண்டும் இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணிக்குள் நீங்கள் அலுவலகத்திற்கு வருவதோ அல்லது அலுவலகத்தை விட்டு செல்வதாகவோ இருந்தால் நிச்சயமாக கார் வசதி வழங்க வேண்டும் இல்லை எனில் உங்களுடைய மனித வளத்துறையிடம் இது குறித்து புகார் அளியுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஒரு பயனர் உங்களுடைய நிறுவனம் கூடிய விரைவில் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதன் அறிகுறிதான் இந்த கார் சேவை ரத்து என்பது என எச்சரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக உங்களுடைய ரெஸ்யூமை தயார் செய்து வேறு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்ய தயாராகுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார்.

பொதுவாக நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சில நடவடிக்கைகள் மூலம் நமக்கு அதனை உணர்த்திவிடும். அதில் ஒன்றுதான் சிக்கன நடவடிக்கை என்ற வார்த்தையை கூறி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளையும் வசதிகளையும் குறைப்பது .

மேலும் புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய மாட்டார்கள் , ஏற்கனவே வேலைக்கு தேர்வு செய்தவர்களுக்கு அப்பாயின்மென்ட் லெட்டர் கொடுக்க மாட்டார்கள், குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு திடீரென ஊதியத்தை குறைப்பார்கள் அல்லது போனஸ் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை வழங்காமல் நிறுத்துவார்கள்.

மேலும் பணி நேரத்தை குறைப்பது, ஒரு குறிப்பிட்ட சில துறைகளை ஒருங்கிணைத்து ஒன்றாக மாற்றுவது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை நீங்கள் கண்டால் நிச்சயம் அடுத்து நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கை உண்டு என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+