பெங்களூர் டெக் ஊழியர் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்?

பெங்களூருவில் மாராத்தஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணிபுரியும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான மென்பொருள் பொறியாளர், மஞ்சுநாத் லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதுல் சுபாஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது பிரிந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக குற்றம் சாட்டி 24 பக்கக் குறிப்பை விட்டுச் சென்றது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுபாஷ் மரண குறிப்பு செய்யப்பட்டவைகளைக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நீதி நியாயம் வேண்டும் என்று கேட்டுகொண்டு தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். அதில், அவரது மனைவி, அவரது தாய், சகோதரர் மற்றும் மாமா ஆகியோரால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். அவரது முடிவுக்கு திருமண முரண்பாடுகள் காரணம் எனவும், சுபாஷ் தனது நான்கு வயது மகனையும் அடையாளமாக குறிப்பிட்டு, அவரை அப்பாவி என்று கூறியுள்ளார்.

பெங்களூர் டெக் ஊழியர் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்?

அவரது குறிப்பில், சுபாஷ் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு குடும்ப நீதிமன்றத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்துள்ளார். அதில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட சட்டப் போராட்டங்களில் சிக்கியதாகவும், அவர் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். அதில், கொலை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் நடத்தை குற்றச்சாட்டுகள் மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.2 லட்சம் தேவை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறியுள்ளார்.

சுபாஷ் தனது இறப்புக்கு முன், அவரது மரண குறிப்பில் வாகனச் சாவிகள் மற்றும் முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள பணிகளின் பட்டியல் உள்ளிட்ட முக்கியமான தகவல்களை வீட்டில் உள்ள அலமாரியில் வைத்துள்ளார். அத்துடன் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையையும் அவர் வீட்டில் வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

சுபாஷ் தனது 24 பக்க மரண குறிப்பை பல பெறுநர்களுக்கு மின்னஞ்சல் செய்ததுடன், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுவுடன் பகிர்ந்து கொண்டார். அது சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது.

இது தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் சுபாஷின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகாரில், சுபாஷின் சகோதரர் தனது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்ததாகவும், இந்த வழக்குகளை தீர்க்க ரூ.3 கோடி செட்டில்மென்ட் கேட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விசாரணை தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+