இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் Work From Home முறை நீடிக்குமா என்ற கேள்வி தீவிரமடைந்து வரும் நிலையில், ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் தனது மேலாளர் வாரந்தோறும் அலுவலகத்திற்கு வரச் சொல்லி வற்புறுத்துவதாக சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் கொள்கையே நிரந்தரமாக WFH-க்கு அனுமதித்த போதிலும், மேலாளரின் நிர்பந்தம் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த ஊழியர், தனது துறை கடந்த ஓராண்டாக நிரந்தர WFH-ல் இயங்குவதாகவும், முக்கியமான மீட்டிங் போன்றவைகளுக்காக மட்டுமே ஊழியர்கள் எப்போதாவது அலுவலகம் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவர் பெங்களூரில் இருந்து கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் வசிப்பதால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தலைமை அலுவலகத்திற்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், அவரது மேலாளர் சமீபத்தில் பணியிட கலாச்சாரத்தை பராமரிப்பது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி ஊழியரை வாரந்தோறும் நேரில் வரச்சொல்லி வற்புறுத்த தொடங்கியுள்ளார்.
இதே காரணத்தை கூறி, ஏற்கனவே தொலைவில் வசிக்கும் 3 சக ஊழியர்களை அந்த மேலாளர் அலுவலகத்திற்கு வர வைத்துவிட்டார். பின்னர், அதையே மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி, தன்னையும் அலுவலகத்திற்கு வர நிர்பந்திப்பதாக பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் வேதனை தெரிவித்துள்ளார். அடிக்கடி பயணம் செய்வது தனக்கு சாத்தியமற்றது என்று ஊழியர் மேலாளரிடம் விளக்கியும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.
இதனால், முன்பு சுமுகமாக இருந்த இவர்களது பணி உறவு தற்போது மிகவும் சிக்கலாக மாறியுள்ளதாக அந்த மென்பொருள் வல்லுநர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் கொண்டு செல்லலாமா என்று யோசிப்பதாகவும், ஆனால் அது எங்கள் அணியில் உள்ள உறுப்பினர்களுடனான உறவை பாதிக்குமோ என்று அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரெடிட் தளத்தில் அந்த ஊழியர் பகிர்ந்த இந்த பதிவுக்கு பலமுறை கமெண்ட் போட்டு வருகின்றனர். பல பயனர்கள், "இந்திய மேலாளர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இவர்களின் உள்நோக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்னும் சிலர், மேலாளர்கள் பலரும் WFH-இல் இருந்து அலுவலகப் பணிக்கு மாறுவதைப் பதவி உயர்வுக்கான அளவுகோலாக நிர்வாகம் பார்ப்பதால், அவர்கள் இப்படி ஊழியர்களை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். சிலர், இதை ஒரு வகையான Micromanagement என்று குறிப்பிட்டனர்.
மேலும் ஒரு பயனர், தனது மேலாளரே WFH செய்தாலும், கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு சலுகை அளிக்க மறுத்து, உடல்நலக் காரணங்களுக்காக வீட்டில் இருந்து வேலை செய்ய மருத்துவச் சான்றிதழ் கேட்டதாக தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். இதனால், ஐடி நிறுவனங்களின் கொள்கைக்கும், மேலாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையிலான மோதல், ஊழியர்களின் தொழில்முறையான சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications