சம்பள உயர்வு 7.5%! வாடகை உயர்வு 10%! இனி எங்க தான் போறது! புலம்பும் பெங்களூரு டெக்கி!

பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தன் சம்பள உயர்வை விட வாடகை உயர்வு அதிகரித்து வருவதை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் பணிபுரியும் நிறுவனத்தில் 7.5 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்ததாகவும், ஆனால் அவர் வசிக்கும் வீட்டு உரிமையாளர் வாடகையை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த நபர் தனது X பதிவில் நான் பெற்ற சம்பள உயர்வு என்னவோ 7.5 சதவீதம் தான். ஆனால் என் வீட்டு உரிமையாளர் வாடகையை 10 சதவீதம் உயர்த்தியுள்ளார். இந்த விகிதத்தை வைத்து பார்க்கும் போது வாடகை என்னுடைய சம்பளத்தை விட அதிகம் என்று பதிவிட்டிருந்தார்.

சம்பள உயர்வு 7.5%! வாடகை உயர்வு 10%! இனி எங்க தான் போறது! புலம்பும் பெங்களூரு டெக்கி!

அவருடைய பதிவு சீக்கிரம் பிரபலமடையத் தொடங்கியது. பல பயனர்கள் நகர்புறங்களில் ஏற்படும் வாடகை பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிடத் தொடங்கினர். ஒரு பயனர் இதுதான் நவீன நகரத்து மோசடி என கமெண்ட் செய்திருந்தார்.

சிலர் முக்கிய நகரங்களில் வாடகை பிரச்சினை எப்படி இருக்கிறது? என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கமென்ட் செய்திருந்தனர். ஒருவர் "இதுதான் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான ஐடி ஊழியர்களுக்கு நடக்கும் உண்மை சம்பவம். எங்கள் சம்பளத்தில் பாதி வாடகைக்கு சென்று விடுகிறது மற்ற பாதி வரிகளுக்கு சென்று விடுகிறது" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

பெங்களூரில் பணிபுரிவது எவ்வளவு விலை உயர்ந்ததாக மாறி வருகிறது என்பதை இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பெங்களூரில் வேலை செய்வது குறைந்த லாபத்தை மட்டுமே வழங்கும் என்று பதிவிட்டிருந்தார். பலரும் இதே போன்ற தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வந்தனர்.

சிலர் 7 சதவீத சம்பள உயர்வும் கூட அரிதாகத்தான் கிடைப்பதாக கமெண்ட் செய்திருந்தனர். நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்று சிலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், கரண்ட் பில் என அனைத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் நிறுவனங்கள் அதற்கு ஏற்ப ஊதியத்தை வழங்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான ஊழியர்களின் முதன்மை கருத்தாக இருந்தது. இது போன்ற ஊழியர்களின் கருத்துக்கள் நிறுவனங்களைச் சென்றடையுமா? அதற்கேற்ப இனி வரும் காலங்களில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+