பெங்களூரைச் சேர்ந்த டெக்கியான வருண் ஹசிஜா வருடத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பளம் தரும் வேலையை விட்டுள்ளார். சிலர் தங்களுக்கு கிடைத்த ஆஃபரை விட அதிக சம்பளம் தரும் ஆஃபர் கிடைத்தால் வேலையை விடுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் இந்த டெக்கி வேறு எந்த ஆஃபரும் கிடைக்காத போதும் தனக்கு கிடைத்த ஹை சேலரி ஜாபை விட்டுள்ளார். இதை தன்னுடைய X பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
ஹசிஜா இந்த முடிவை திடீரென எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலை வாய்ப்பையும் பற்றி பரிசீலிக்கும் போது இவர் 3 விஷயங்கள் குறித்து ஆராய்கிறார். மகிழ்ச்சி வேலையில் அவர் ஏற்படுத்த இருக்கும் தாக்கம், தனக்கென நிதியை உருவாக்குவது. வேலையில் மகிழ்ச்சி என்பது அத்தியாவசியமானது. ஏனெனில் இது மற்ற அனைத்திற்கும் அடித்தளமான ஒன்று.

அதேபோல வாடிக்கையாளர் வணிகம் என இரண்டிற்கும் தேவைப்படும் விஷயத்தை பணியில் இருக்கும் போது செய்ய வேண்டும். அதே நேரத்தில் தனிப்பட்ட நிதி வளர்ச்சிக்கும் தேவைப்படும் நியாயமான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என்பதே ஹசிஜாவின் கொள்கை.
ஹசிஜா இதற்கு முன்னர் பணியாற்றிய ரோலில் தனக்கான மகிழ்ச்சி மற்றும் பணியில் அவர் ஏற்படுத்திய தாக்கம் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளார். மேலும் Ed-Tech துறை ஏற்கனவே சில போராட்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இதே பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டுமா? என்ற கேள்வி ஹசிஜாவிற்கு எழுந்துள்ளது.

தனக்கென ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு பணிக்குச் செல்லும் ஹசிஜா ரூ.1 கோடி ரூபாய் வேலை வாய்ப்பை விட்டது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்து வருகின்றனர். இவருடைய X பதிவு 2.2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.
பலரும் ஹசிஜாவின் தைரியமான முடிவைப் பாராட்டியுள்ளனர். சிலர் வேறு எந்தவித நிதி பாதுகாப்பும் இல்லாமல் அதிக ஊதியம் தரும் வேலையை விடுவது நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இவருடைய X பதிவு தொழில் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை சமநிலை ஆகியவற்றுக்கு தனிநபர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. ஹசிஜாவின் லிங்க்டின் சுயவிவரத்தின் படி இவர் எட்-டெக் நிறுவனத்தில் டைரக்டராக பணிபுரிந்துள்ளார். எட்-டெக், ஆட்-டெக் மற்றும் ஹெல்த்-டெக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டிசைனிங், டெவெலப்மென்ட் போன்ற பணிகளிலும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு சுமார் 7 வருட பணி அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications