பெங்களூரு: இந்தியாவில் செயல்பட கூடிய நிறுவனங்கள் ஊழியர்களிடம் வாங்கும் வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்து வருகிறது. இந்நிலையில் தான் நிறுவன தலைவர் வாரம் 70 மணி நேரம், 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என கூறுவது கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் மிகப்பெரிய நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக வேலை செய்தும் மாதத்திற்கு 35000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியதாகக வெளியிட்டிருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெடிட் தளத்தில் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெரிய ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் ஒன்பது ஆண்டுகளாக தனக்கு கிடைக்கும் ஊதியம் குறித்தும் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனத்தில் நான் ஒன்பது ஆண்டுகளாக வேலை செய்தேன், நான் இறுதியாக இங்கு வாங்கிய சம்பளம் மாதத்திற்கு 35000 ரூபாய் மட்டுமே என பதிவிட்டுள்ளார். இந்த நிறுவனம் பல சமயங்களில் தங்களுக்கு ஒரு இலக்கத்தில் தான் ஊதிய உயர்வு வழங்கி இருக்கிறது என கூறியுள்ள அவர் ஊழியர்களுக்கு பொறுப்பை மாற்றுவார்கள் ஆனால் ஊதியத்தை உயர்த்தவே மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய ஊழியர்கள் வேலைக்கு வருவதற்காக கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் சார்ஜ் வாங்குவார்கள் இதற்கே மாதம் 3000 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அது தவிர ஊழியர்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருந்தார்கள் என கூறியுள்ளார்.
வாரத்திற்கு குறிப்பிட்ட மணி நேரம் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் சில சமயங்களில் வார இறுதி நாட்களில் கூட வந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு இந்தியாவின் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்த போது இது நமக்கு வளர்ச்சியை தரும் என நம்பினேன் ஆனால் அது நடக்கவே இல்லை என கூறியுள்ளார்.
நான் பின்னர் ஒன்பது ஆண்டுகளில் அந்த வேலையை விட்டு விட்டேன் எனக் கூறியுள்ள அவர், மற்றொரு சர்வதேச நிறுவனத்தில் தான் பணிக்கு சேர்ந்ததாகவும் அப்போதுதான் இந்தியாவில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் எப்படி ஊழியர்களின் உழைப்பை சுரண்டுகின்றன என்பதை புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் நான் வேலை செய்தேன் ஆனால் எனக்கு அவர்கள் வழங்கிய ஊதியம் 35000 தான் அதன் பிறகு வேறு ஒரு நிறுவனத்திற்கு சேர்ந்த நான் தற்போது 1.7 லட்சம் ரூபாயை மாத ஊதியமாக பெறுகிறேன் என கூறியுள்ளார்.அவருடைய இந்த பதிவின் கீழ் பலரும் தங்களின் உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்ற விவரங்களை பதிவிட்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications