அமெரிக்காவுக்கு சான்பிரான்சிஸ்கோ பே ஏரியா எப்படியோ, இந்தியாவுக்கு பெங்களூர். இன்று நாம் பயன்படுத்தும் பல முக்கியமான டிஜிட்டல் சேவைகள் அனைத்திலும் பெங்களூர் இருக்கும், அல்லது பெங்களூர் டெக் ஊழியர்களின் பங்கு இருக்கும்.
இப்படி இந்தியாவின் சிலிக்கான் வேலியாக திகழும் பெங்களூர் எப்போதும் டிராபிக் பிரச்சனையால் விமர்சிக்கப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டாலும், கடந்த சில வருடங்களாக பெங்களூரின் உள்கட்டமைப்பு மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், குறிப்பாக மழைக்காலத்தில் மக்கள் சாலையில் பயணிப்பது பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது என குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஐடி பணியாளரான அமர்நாத் சிவசங்கர் என்பவர் நகரின் சிதிலமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்ய ஐடி பூங்காக்களை தற்காலிகமாக மூட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரின் உயிர் நாடியாக இருக்கும் ஐடி பார்க்குகளை மூட வேண்டும் அளவுக்கு சாலை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவருடைய பதிவை சுமார் 1.63 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதோடு சுமார் 2800 பேர் இப்பதிவை லைக் செய்துள்ளனர். இந்த பதிவு இணையத்தில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. அமர்நாத் சிவசங்கர் பதிவை விரிவாக பார்ப்போம் வாங்க.
பெங்களூரில் ORR எனப்படும் வெளிவட்ட சாலை, ஐடிபிஎல், எலக்ட்ரானிக் சிட்டி, மண்யதா டெக் பார்க், பாக்மனே டெக் பார்க் போன்ற இடங்களில் ஏராளமான ஐடி பார்க்குகள் உள்ளது. இந்த ஐடி பார்க்கில் உள்ள ஐடி நிறுவனங்கள் கொரோனா காலத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டு ஊழியர்களை WFH-ல் இயங்கினர். இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் எவ்விதமான வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ளவில்லை.
இதேபோல் கர்நாடக அரசு தற்போது ஐடி நிறுவனங்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்க உத்தரவிட்டு மொத்த சாலையும் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மோசமான சாலை காரணமாக ஐடி ஊழியர்கள் தினமும் பல மணிநேரம் போக்குவரத்திலேயே தத்தளிக்கின்றனர். பயண நேரம் அதிகரிப்பதால் ஊழியர்கள் தங்கள் முக்கியமான உற்பத்தி நேரத்தை இழக்கின்றனர்.
இந்த நிலையில் ஐடி பூங்காக்களை சில மாதங்களுக்கு மூடி, சாலைகள் சரி செய்தல், மழைநீர் வடிகால்கள் சரி செய்வது, ப்ளைஓவர் கட்டுமானம், அதிகளவில் பி.எம்.டி.சி பேருந்துகளை வாங்குவது மற்றும் மெட்ரோ பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அமர்நாத் சிவசங்கர் தனது பதிவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தை டேக் செய்து எழுதியுள்ளார்.

கர்நாடக அரசு ஐடி பார்க்குகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு BCP திட்டத்தை செயல்படுத்தியும், வொர்க் ப்ரம் ஹோம் கொடுத்தும் ஒட்டுமொத்தமாக பெங்களூர் பிரச்சனையை ஓரே நேரத்தில் சரி செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.
பொதுமக்களின் கருத்து
இந்த பதிவு சமூக ஊடகத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. சிலர் இந்த யோசனையை ஆதரித்தாலும், மற்றவர்கள் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்று விமர்சித்தனர். பெங்களூருவின் உள்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியத்தை இந்த விவாதம் மீண்டும் தூண்டியுள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications