Alexa-வில் பாகுபாடு.. ஒரே ஒரு மெயில் போட்ட 19 வயது இளைஞர்.. வாழ்க்கையை மாற்றிய அமேசான் நிறுவனம்..!!

வாழ்க்கையில் சில சமயம், ஒரு துணிச்சலான முயற்சி மிகப்பெரிய கதவுகளை திறக்கும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர் ஆஷிஷ் ஜா. வெறும் 19 வயதில் அமேசான் (Amazon) நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு அவர் அனுப்பிய ஒரே ஒரு 'கோல்ட் மெயில்' (Cold Email), இன்று அவரை அமேசான் நிறுவனத்திற்குள்ளேயே பணிபுரியும் நிலைக்கு உயர்த்தியுள்ளது.

சமீபத்தில், தனது அனுபவத்தை எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். "நான் ஒருகாலத்தில் Alexa சாதனத்தை வெல்ல முடியாததால் மிகவும் வருத்தமடைந்தேன். அந்த ஏமாற்றத்திலிருந்து ஊக்கமடைந்து, 19 வயதில் நேரடியாக Amazon நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்.

Alexa-வில் பாகுபாடு.. ஒரே ஒரு மெயில் போட்ட 19 வயது இளைஞர்.. வாழ்க்கையை மாற்றிய அமேசான் நிறுவனம்..!!

அது குழந்தைத்தனமான செயல் என்று எனக்கு தெரியும். அந்த மின்னஞ்சலின் மொழியும் சிறப்பாக இல்லை. ஆனால், அதுவே எனது வாழ்க்கையை மாற்றிய திருப்புமுனையாக இருந்தது. நான் அனுப்பிய அந்த மின்னஞ்சலைப் படித்த Alexa-வின் தலைமை டெவலப்பர் மார்க்கெட்டிங் மேலாளர், எனது வேலையை கவனித்து, தனிப்பட்ட முறையில் என்னைத் தொடர்பு கொண்டார்.

அவர் எனது முயற்சியைப் பாராட்டி, அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பலரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன் சில வாரங்களுக்குள்ளாகவே, Amazon இந்திய டெவலப்பர்களுக்கான புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியது. பின்னர், அடுத்த 5 ஆண்டுகளில் எனக்கும் @alexadevs-வுக்கும் இடையேயான பயணம் ஒரு வரலாறு ஆகிவிட்டது. அதைப் பற்றி நீங்கள் Google-ல் தேடிக் காணலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, இந்திய இளம் டெவலப்பரான ஆஷிஷ் ஜா, அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அந்த மின்னஞ்சலின் தலைப்பு "அமேசான் அலெக்சா விளம்பரம் தொடர்பான பிரச்சனை" (Issue with Amazon Alexa Promotion) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மின்னஞ்சலில், "முதலில், அலெக்சா உட்பட Amazon வழங்கும் அற்புதமான சேவைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் சமீபத்தில் எனது முதல் Alexa Skill-ஐ உருவாக்கினேன். 5 நாட்களுக்குள் சுமார் 220 தனித்துவமான பயனர்களைப் பெற்றது. ஆனால், நான் கவனித்தது என்னவென்றால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள டெவலப்பர்கள் 75 அல்லது 100 பயனர்களை அடைந்தால், அவர்களுக்கு Echo Dot சாதனம் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்திய டெவலப்பர்களுக்கு அத்தகைய சலுகை கிடையாது. இதனால் எனக்கு சிறிது புறக்கணிக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. இந்திய டெவலப்பர்கள் உலகளாவிய அளவில் பின்தங்காமல் இருக்க, இந்த பாகுபாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறேன்" என்று எழுதியிருந்தார்.

இந்த மின்னஞ்சல் வெளியான பிறகு, பல எக்ஸ் தள பயனர்கள் ஆஷிஷ் ஜாவின் துணிச்சலைப் பாராட்டினர். "சரியான விஷயங்களுக்குக் கோபப்படுவது என்பது கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படாத ஒரு கலை. அது இங்கு கைகொடுத்துள்ளது" என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல், "கோல்ட் மெயில்களின் சக்தியைப் பலர் குறைத்து மதிப்பிடுகிறார்கள். நீங்கள் உண்மையானவராகவும், விற்பனை நோக்கு இல்லாமலும் இருந்தால், யாராவது பதிலளிப்பார்கள்" என்று மற்றொருவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, ஆஷிஷ் ஜா குரல் தொழில்நுட்பவியலாளர் மற்றும் Amazon Alexa டெவலப்பராக உள்ளார். அவர் பல Alexa Skills-களை உருவாக்கி, பல விருதுகளை வென்று, அதிகாரப்பூர்வ Amazon Alexa Champion ஆகவும் பெயரிடப்பட்டுள்ளார். சரியான நேரத்தில், எழுதப்பட்ட மின்னஞ்சல் மூலம், எந்த அளவுக்கு உயரிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்பதற்கு ஆஷிஷ் ஜாவின் கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+