ரூ.43.5 லட்சம் சம்பளம்.. ரூ.30 லட்சம் வரி.. வேலையை இழந்து வேதனையில் தவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், தனது வேலை இழப்புக்குப் பிறகு சந்தித்த போராட்டங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெங்கடேஷ் அல்லா என்பவர் பகிர்ந்த ஒரு பதிவு தான், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், சலீம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெங்களூருவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரின் வாழ்க்கைப் பயணம் பற்றி கூறப்பட்டுள்ளது.

ஒரு முன்னணி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) பட்டம் பெற்ற சலீம், ஆண்டுக்கு ரூ.43.5 லட்சம் சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், கடந்த மாதம் அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டார். அப்போது அவரது நிறுவனம் பணி நிறைவு தொகையாக மூன்று மாத சம்பளத்தை மட்டுமே வழங்கியது. இது அவருக்கு எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தியது. தற்போது ஒரு வேலையில்லாத தந்தையாகவும், மன அழுத்தத்துடன் போராடும் நபராக சலீம் மாறியுள்ளார்.

ரூ.43.5 லட்சம் சம்பளம்.. ரூ.30 லட்சம் வரி.. வேலையை இழந்து வேதனையில் தவிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்!

இவர், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30 லட்சத்திற்கும் மேல் வருமான வரி செலுத்தியுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் ரூ.11.22 லட்சம் வரி செலுத்தியுள்ளார். இவ்வளவு வரி செலுத்தியவராக இருந்தும், வாழ்க்கையில் நெருக்கடி வந்தபோது யாருடைய ஆதரவு இல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார். நான் லட்சக்கணக்கில் வரி செலுத்திய அதே அரசாங்கம், என் வாழ்க்கையில் தேவைப்பட்ட தருணத்தில் என்னை கை விட்டுவிட்டது" என்று சலீம், வெங்கடேஷ் அல்லாவிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது வீட்டுக் கடனோ அல்லது வேறு கடன்களோ இல்லாத நிலையில், சலீம் தன்னுடைய பணிநீக்கத் தொகையும், சேமிப்பை மட்டுமே நம்பிக்கையாக வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவர் ஆண்டுக்கு தன்னுடைய ஒரு குழந்தைக்கு மட்டும் ரூ.1.95 லட்சம் செலவிட வேண்டிய நிலையில் உள்ளார். சலீம், "தனக்காக யாரும் இல்லை" என்பது போன்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது தனிப்பட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்று வெங்கடேஷ் அல்லாவிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதுபற்றி விவாதங்களில், சிலர் சலீம் அரசாங்க உதவியை எதிர்பார்ப்பது சரியாகாதா..? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு "அமெரிக்கா, யுகே போன்ற முன்னேற்றமான நாடுகளில் கூட திடீர் பணிநீக்கத்திற்கு அரசு நேரடி நிவாரணம் வழங்குவது அபூர்வம்" என சிலர் குறிப்பிட்டுள்ளனர். மற்றொருபுறம், சிலர் இந்திய வரி முறையைப் பற்றி கருத்து தெரிவித்தனர். "அரசாங்கம் உயர்ந்த வருமானம் கொண்டவர்களிடம் அதிக வரி வசூலிக்கிறது. ஆனால் அதற்கு பதில் சாலை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம் போன்ற உள்கட்டமைப்புகளை வழங்குகிறது" என கூறியுள்ளனர்.

அதில் ஒரு பயனர், "அரசின் வரி விதிப்புகளால் உருவாக்கப்படும் சாலைகள், பாதுகாப்பு மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் தான் ரூ.45 லட்சம் வருமானம் பெறும் ஒருவரை அந்த அளவுக்கு சம்பாதிக்க வைத்துள்ளது. ஆனால், அதே வருமானத்தை காசா போன்ற இடங்களில் பெற முயற்சித்துப் பாருங்கள்.. அது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஆண்டுக்கு ரூ.45 லட்சம் சம்பளம் வாங்கும் ஒருவர், ரூ.15 லட்சத்தை வைத்துக் கூட வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது 30% வரிகளுக்கும், 30% சேமிப்பிற்கும் செலவிட வேண்டும். ஆனால், பலர் ரூ.45 லட்சம் சம்பாதித்தாலும், ரூ.90 லட்சத்திற்கான வாழ்க்கையை முறையைத்தான் விரும்புகின்றனர். வருமானம் இல்லாமல் போனதும், அவர்கள் அரசை குறை கூறுகின்றனர்" என்று பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிலர் இந்த விவகாரத்தில் அரசை விமர்சிப்பதை விட தனிநபர்களின் நிதி நிர்வாகத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு பயனர் தனது கருத்தில், "இங்கு பிரச்சனை வரி அல்ல. நீண்டகால நிதித் திட்டமிடல் இல்லாததுதான்" என்று தெரிவித்துள்ளார். நாடின் வளர்ச்சிக்காக அதிக வருமானம் ஈட்டுபவர்கள், அதற்கேற்ப அதிக வரி செலுத்துகிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு கடுமையான நேரத்தில் சமூக பாதுகாப்பும், அரசின் ஆதரவும் காணப்படவில்லை என்ற கவலையைக் குரலாக்குகிறார் சலீம். நாட்டின் பொருளாதாரத்தை சுமக்கும் நடுத்தர வர்க்கத்தைக் குறைந்தபட்சம் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமாவது அரசிடம் உள்ளதா? அல்லது வரி செலுத்தும்போது மட்டுமே அவர்கள் நினைவுக்கு வருகிறார்களா? இத்தகைய சிந்தனையைத் தூண்டும் சலீம் போன்றோரின் அனுபவம், இந்தியாவின் நடுத்தர வர்க்கம் எதிர்கொள்ளும் பெரும்பாலும் பேசப்படாத உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+