ஷாக் கொடுக்கும் பெங்களூர் டெக்கி..!! ரூ.3 லட்சம் சம்பளம்.. மாத செலவு எவ்வளவு தெரியுமா..?

எவ்வளவு சம்பதிக்கிறோம், அதை எப்படி செலவு செய்கிறோம் என்பதை சமுக வலைத்தளத்தில் ரீல்ஸ் போடுவது தற்போது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகியுள்ளது. ஒரு காலத்தில் கணவன் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது மனைவிகளுக்கு தெரியாத காலம் போய் இப்போது ஆள் ஆளுக்கு சமுக வலைத்தளத்தில் சம்பளம் குறித்து ரீல்ஸ் போடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

அப்படி பெங்களூரு வசிக்கும் ஒரு டேட்டா இன்ஜினியர், தனது மாத சம்பளமான 3 லட்சத்தை எவ்வாறு செலவழிக்கிறார் என்பதை வீடியோவாக பதிவிட்ட நிலையில் தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாக் கொடுக்கும் பெங்களூர் டெக்கி..!! ரூ.3 லட்சம் சம்பளம்.. மாத செலவு எவ்வளவு தெரியுமா..?

மாதம் 3 லட்சம் சம்பளம் பலருக்கும் பெரும் செல்வமாக உள்ளது, ஆனால் ஐஐடி, ஐஐஎம் கல்லூரியில் படித்தவர்களுக்கு, முன்னணி டெக் நிறுவனத்தில் முக்கிய தொழில்நுட்பத்தில் பணியாற்றுபவர்களுக்கு இது எளிதாக கிடைக்கும் ஒரு விஷயமாக மாறியுள்ளது. இப்படிப்பட்டவர் தான் இந்த பெங்களூர் டெக்கி.

இன்ஸ்டாவில் Thinking Mori என பெயர் கொண்ட கணக்கில் தான் இந்த பெங்களூர் டெக்கி வீடியோ பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ டிசம்பர் மாதத்தில் பதிவிடப்பட்டாலும், தற்போது இணையத்தில் பெரும் டிரெண்டாகியுள்ளது. பெங்களூர் டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் குறித்த அச்சம் அதிகரித்து வரும் வேளையில், இத்தகைய வீடியோ பலருக்கும் எரிச்சலை உண்டாக்கும் என்றாலும், இதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு செல்வது தான் புத்திசாலித்தனம். சரி விஷயத்திற்கு வருவோம்.

Thinking Mori மாதாந்திர செலவுகளைப் பார்க்கும்போது முதலில் ஷாக் தான் எல்லோருக்கும் வரும். ஆம் ரூ.3 லட்ச சம்பத்தில் மாதம் 2.12 லட்சத்திற்கு கட்டாய செலவுகளை வைத்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவருடைய செலவுகள் பட்டியலில் பயணச் செலவுகள் இல்லை.

Thinking Mori-யின் செலவுகளில் வீட்டு வாடகை ரூ.20,000 ஆக உள்ளது, அதனுடன் வீட்டு உதவியாளருக்கான ரூ.5,000 சேர்த்து, மொத்த வீட்டு செலவு ரூ.25,000 ஆகிறது. இதில் மின்சாரம், தண்ணீர் மற்றும் இணையச் சேவை போன்ற அடிப்படை வசதிகளும் அடங்கும்.

மளிகைப் பொருட்களுக்கு ரூ.8,000 செலவாகிறது, வெளியே சாப்பிடுவதில் 2,000 ரூபாய் செலவாகிறதாக Thinking Mori தெரிவித்துள்ளார்.

மேலும் பர்சனல் கேர், சரும பராமரிப்பு, பரிசுகள் மற்றும் இதர செலவுகளுக்கு சுமார் ரூ.5,000 தேவைப்படுகிறது. உடற்பயிற்சி விஷயத்தில் காராக இருக்கும் Thinking Mori ஜிம் மற்றும் பர்சனல் டிரைனர்-க்கு ரூ.12,000 செலவழிக்கிறார்.

பொழுதுபோக்கு செலவுகளாக நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆப்பிள் டிவி போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு மாதம் 300 ரூபாய் மட்டுமே செலவு செய்கிறார்.

முக்கிய செலவுகள்
பெற்றோருக்காக வாங்கிய ஆப்பார்ட்மென்ட் வீட்டிற்கு மாதம் ஈஎம்ஐ-ஆக ரூ.30,000 செலுத்துகிறார். ரியல் எஸ்டேட் முதலீடு வேகமாக வளரும் சொத்தாக இல்லை, ஆனால் இது மன அமைதிக்காகவும், நம்மெக்கன ஒரு வீடு என்ற நோக்கத்துடன் செய்யப்பட்ட முடிவு என்பதையும் தெரிவித்துள்ளார்.

முதலீடு
ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சத்தை SIP முறையில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டிருக்கிறார் Thinking Mori, அதாவது அவருடைய சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு முதலீடு செய்கிறார். அவசரகால நிதியாக ஆறு மாதங்களுக்கான தொகையை ஏற்கெனவே சேமித்து வைத்த பின்பே தனது முதலீட்டை துவங்கியுள்ளார்.

அவரது செலவுகளில் பயண செலவு தான் ஷாக் கொடுக்கிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் இவர் சுமார் ரூ.7 லட்சத்தை பயணங்களுக்குச் செலவழித்துள்ளார்.

இன்றைய தலைமுறையினரை பலர் குறை கூறினாலும், நிதியியல் விஷயத்தில் தெளிவாகவே உள்ளனர். தற்போது பல பள்ளி மாணவர்கள், மாணவிகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். Thinking Mori தனது சம்பளத்தில் 3ல் ஒரு பங்கை முதலீடு செய்வது, 6 மாத செலவுகளுக்கான நிதியை சேமித்து வைத்திருப்பது போன்றவை உண்மையில் பாராட்டுக்குரியவை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+