இந்தியாவின் பெரும் நகரங்களில் ஒன்றாகவும் நாட்டின் டெக் ஹப் ஆகவும் இருக்கும் பெங்களூர் எப்போதும் இணையவாசிகள் மத்தியில் முக்கியமான விவாத பொருளாகவே உள்ளது. பெங்களூர் நகரத்தை ஒப்பிட்டு பல நகரங்கள் சிறப்பு என்ற விவாதம் இருந்துக்கொண்டே இருக்கிறது.
அதிலும் சமீபத்தில் பிற நகரங்களில் இயல்பாக நடக்கும் பல விஷயங்கள் பெங்களூரில் நடந்தால் ஆகா ஓகோ என பாராட்டி வருவது பிற நகரங்களில் இருக்கும் மக்களுக்கு என்னடா ஓவர் பில்டப்பா இருக்கு.. என கேட்கும் அளவுக்கு மாறியுள்ளது. அப்படி பெங்களூரில் நடப்பதில் எந்த விஷயங்கள் எல்லாம் ஓவர் பில்டப்பாக பேசப்படுகிறது? வாங்க பார்ப்போம் பெரிய லிஸ்ட்டே இருக்கு..!

பெங்களூர் டிராபிக் : பெங்களூரில் டிராபிக் மிகவும் அதிகம் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று, ஆனால் இது மும்பை, டெல்லி போன்ற பல நகரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. பெங்களூரில் டிராபிக் வைத்து பல மீம்கள், காமெடி வீடியோக்கள் இணையத்தில் பிரபலம், ஆனால் இதை கொண்டாடுவதிலும், தொடர்ந்து பேசுவதிலும் தேவையற்றது என்பது மக்களின் கருத்து.
பெங்களூர் வீட்டு வாடகை : பொதுவாக நாட்டின் அனைத்து பெரு நகரங்களிலும் வீட்டு வாடகை அதிகமாக தான் இருக்கும், குறிப்பாக டெல்லி, மும்பையில் 100- 150 சதுரடி வீட்டுக்கு கூட 10000 முதல் 15000 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இப்படியிருக்கையில் பெங்களூர் வீட்டு வாடகை குறித்து இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
பெங்களூர் மழை வெள்ளம் : இந்தியாவில் பல பெரு நகரங்கள் கடந்த 20 -25 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்த காரணத்தால் முறையாக திட்டமிடப்படாமல் கட்டப்படும் காரணத்தால் பல உள்கட்டமைப்பு பிரச்சனைகள் உள்ளது. ஆனால் பெங்களூர் மழை வெள்ளத்தின் போது தேங்கிய நீர் மிகவும் தாமதமாக வடிந்தது இந்தியாவே பேசியது. ஆனால் மும்பை, சென்னை, அகமதாபாத், புனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களில் அவ்வபோது இதுப்போன்ற பிரச்சனைகள் இருப்பது இயல்பான ஒன்று தான் அப்புறம் ஏன் பெங்களூர் மட்டும் ஸ்பெஷல் என கேள்வி எழுகிறது.
பெங்களூர் கேப் கட்டணம் : அமெரிக்க, லண்டன் முதல் டெல்லி, மும்பை வரையில் ஆன்லைன் மூலம் புக் செய்யப்படும் கேப்-களுக்கு கட்டணம் அதிகமாகவே உள்ளது. ஆனால் பெங்களூர் கேப் கட்டணம் மட்டும் இணையத்தில் பெரும் விவாத பொருளாகவே உள்ளது.
பெங்களூர் வீட்டு ஓனர்கள் : சமீபத்தில் பெங்களூர் வீட்டு ஓனர்கள் தங்களுடைய வீட்டில் குடியிருப்பவர்களுக்கு அதிகப்படியான தகுதியை எதிர்பார்ப்பது முக்கிய பேசுபொருளானது. ஆனால் இது அனைத்தும் ப்ரைம் ஏரியா, காஸ்ட்லியான வீடுகள், அப்பார்ட்மெனட்களில் மட்டும் தான் உள்ளது. மற்ற இடத்தில் வழக்கம் போல் வாடகைதாரர் மற்றும் வீட்டு ஓனர் மத்தியிலான பேச்சுவார்த்தையிலேயே முடிகிறது.
மும்பை, சென்னை, அகமதாபாத், புனே, ஹைதராபாத், கொல்கத்தா-வின் ப்ரைம் சொத்துக்களில் இதேபோன்ற நடைமுறை நீண்ட காலமாக உள்ளது. மாதம் 2 - 5 லட்சம் வாடகை அளிக்கும் அனைத்து வீடுகளுக்கு இதுபோன்ற நடைமுறை இருப்பது இயல்பான ஒன்று.
வொர்க் கல்சர் : சமீபத்தில் பெங்களூரில் டிராபிக் ஜாம், தியேட்டர்-களில் பணியாற்றும் போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டெல்லி மெட்ரோவில் நீங்க போயிருக்கீங்களா..? என நெட்டிசன் கேட்கிறார்.
விரல் நுனியில் டெக் : பெங்களூரில் அனைத்து தரப்பு மக்களும் டிஜிட்டல் மற்றும் டெக் சேவைகளை எளிதாக பயன்படுத்துவதும் முக்கிய விவாத பொருளாக உள்ளது. இந்தியாவில் பெரிய ஐடி நகரத்தில் இப்படி தான் இருக்கும், இதில் வியப்படைய என்ன இருக்கு எனவும் பலரும் கேட்கின்றனர்.
யூபிஐ : இதேபோல் யூபிஐ சேவை பெங்களூரில் அனைத்து இடங்களிலும், அனைத்து சேவைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை பெருமையாகவே பேசுகின்றனர். சமீபத்தில் டிஜிட்டல் வாட்சில் QR கோட் கொண்டு ஆட்டோக்காரர் பேமெண்ட் பெற்ற செய்தி இந்தியா முழுக்க டிரெண்டானது. ஆனால் இது நாட்டின் பிற நகரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது என பிற நகர மக்களின் வாதம்.
பெங்களூர் க்ளைமேட்: இந்திய மக்கள் அனைவருக்கும் பெங்களூர் என்ற உடன் அனைத்து தரப்பினரும் பேசுவது க்ளைமேட். பெங்களூர் இருக்கும் பகுதி அப்படிப்பட்டது இதில் தனிப்பெருமை ஏதுமில்லை, நாட்டின் முக்கிய நகரங்கள் அமைந்திருக்கும் எலிவேஷன் அதாவது உயரம்.
பெங்களூர் - 920 மீட்டர்
சென்னை - 6 மீட்டர்
ஹைதராபாத் - 542 மீட்டர்
புது தில்லி - 210 மீட்டர்
ஸ்ரீநகர் - 1,585 மீட்டர்
புனே - 560 மீட்டர்
விசாகப்பட்டினம் - 45 மீட்டர்
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications