இந்தியாவின் மிகவும் பரபரப்பான இரண்டு மெட்ரோ நகரங்களான பெங்களூரு மற்றும் மும்பை இடையேயான ரயில் பயணம் இனி வேகமாகவும், மேலும் வசதியாகவும் மாறவிருக்கிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து, இவ்விரு நகரங்களை இணைக்கும் இரண்டாவது நேரடி அதிவிரைவு ரயிலுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
பயண நேரம் 18 மணி நேரமாக குறையும் : புதிதாக வரவிருக்கும் இந்த அதிவிரைவு ரயில் சேவை, தற்போதைய உதாயன் எக்ஸ்பிரஸ் ரயிலை விட பயண நேரத்தை சுமார் 18 மணி நேரம் குறைக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள உதாயன் எக்ஸ்பிரஸ், 1,136 கி.மீ தூரத்தை கடக்க 23 மணி நேரம் 35 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. எனவே, புதிய ரயில் சேவை பயணிகளுக்கு மிகவும் விரைவான மாற்றுப் பாதையாக அமையும்.

புதிய ரயில் வழித்தடம் :இந்த அதிவிரைவு ரயில், மத்திய கர்நாடகா வழியாக ஹுப்பள்ளி-தர்வாட் வழியைப் பயன்படுத்தும். பெங்களூருவில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினஸில் (SMVT) இருந்து புறப்பட்டு, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸில் (CSMT) முடிவடையும்.
இந்த ரயில் துமக்கூரு, தாவண்கெரே, ஹாவேரி, ஹுப்பள்ளி-தர்வாட் மற்றும் பெலகாவி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாததால், இந்த ரயில் நிறுத்தங்கள் மற்றும் வழித்தடங்கள் தற்காலிகமானவையாகவே கருதப்படுகின்றன.
உதாயன் எக்ஸ்பிரஸ் வழியில் மாற்றம் : தற்போதைய உதாயன் எக்ஸ்பிரஸ் ரயில், தொட்டபல்லாபுரா, குண்டக்கல், ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி மற்றும் சோலாப்பூர் போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுத்தங்களுடன் நீண்ட வழியில் செல்கிறது. இந்த நீண்ட வழித்தடமே பயண நேரம் அதிகரிக்க காரணம். புதிய ரயிலின் விரைவான மத்திய கர்நாடக வழித்தடம் காரணமாகப் பயண நேரம் கணிசமாகக் குறையும்.
மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இந்த முடிவு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கர்நாடகா வழியாக மற்றொரு ரயிலை அறிமுகப்படுத்துவதன் மூலம் மும்பைக்கு செல்லும் தொடர்பை மேம்படுத்த வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கை இருந்து வந்தது. எனவே, இந்த புதிய சேவை லட்சக்கணக்கான மக்களுக்குப் பயனளிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய ரயில் சேவையை தொடங்க அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே இணை அமைச்சர் வி. சோமண்ணா ஆகியோருக்கு அவர் சமூக வலைதளம் மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications